தென் காமரூபத்தின் கதை நாவல் வாசித்தேன்..இந்திய நாவல்கள் வாசித்தால் அதில் தங்களின் பங்கு அதிகம்..காரணம் இத்தகைய நாவல்களின் சிறப்புகள் சொல்லி, ஒரு பட்டியலும் தந்து கவனத்தை இந்திய நாவல்கள் பால் திருப்பியவர் தாங்கள்..
சுமார் 150 ஆண்டுகளுக்கு முந்தைய காமரூப் மாட்ட , அபின் அரித்த ஊரின் கதை என இதை கூறலாம்..அஸ்ஸாமின் மாவட்டமிது.. பஞ்சங்கள், விக்டோரிய ஒழுக்கப் பண்பாட்டு சிதைவு இவைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் எப்படி தீவிரப்படுத்தின என்பதைக் கொண்டு இந்த அபின் கலாச்சார காரணத்தையும் அறியலாம்..
வெற்றிலை வதக்கும் வாடையும், அபின் வாடையும், யானை சாணி வாடையும் எப்போதும் வீசும் ஊர் அது..80 சதம் பேர் ஊரில் அபினடிமைகள்..இந்திரநாத் அதிகார் கதையின் மையம்..ஊரின் [ சத்திரா] தலைமை பொறுப்பு வகிப்பவர் தற்போது மகாபிரபு கொஸைன் அதிகாராக இருப்பதால் அடுத்த அதிகார் அவரது மகன் இந்திரநாத் இளைய கொஸைன்..
நாவலில் ஜெகன்னாத் யானை வருகிறது..அது கொஸைன்களின் செல்லம்…அதற்கு மதம் பிடித்துவிட நாவல் முழுதும் மதத்தோட சுற்றி அலைகிறது..எந்த நேரமும் ஜெகன்னாத்தால் எதுவும் நடக்கலாம் என காம ரூப் தென்கரை மக்கள் பீதியில் இருப்பர்.. அதனால் வாசிப்பின் போது மதயானையை வாழ்க்கையோடு ஒப்பிட தோன்றியது..
எஜமானய் பிராமணர்கள் வீட்டுப் பெண்கள்,கொஸைனீகள் எல்லாம் பூப்படையும் முன்னே அவர்களுக்கு திருமணம் நடத்த வேண்டு்ம்.. மணத்திற்கு முன் பெரியவளானால் குடும்பத்தை சாதியை விட்டே ஒதுக்கி வைத்திடுவர்.. அன்றைய வாழ்முறை இன்று மின் அதிர்ச்சி.
கம்யூனிஸ்டுகளின் எழுச்சி பேசப்படுகிறது..கொஸைன்கள் வந்து உழட்டும், அப்போது அவர்கள் நிலத்தைத் தருகிறோம் என்று வலுவாக முழங்கி கம்யூனிஸ்டுகள் நிலத்தை அபகரிக்கின்றனர்.
ஜீரங்கா காடு, மாதியா மலை, ஜகல்தியா நதி என இயற்கை இருப்புகள் ஜீவனோடு பதிவாகியுள்ளன.அந்நதி மீதுள்ள மரப்பாலம் ஒன்று பலமுறை வந்து ஒரு கதாபாத்திரம் எனவே பதிந்து விடுகிறது..
நாவலின் மற்றொரு முக்கிய விவரணை விதவைகளின் நெருக்கடி..சின்ன கொஸைனி,கிரிபாலா, துர்க்கா இவர்களின் இணை இறக்க வரும் உடல்,மன ,சமூக நெருக்கடிகள் நுணுக்கமாக பேசப்பட்டுள்ளன..
இந்திரநாத் சகோதரி கிரிபாலா, சித்தி சின்ன கொஸைனி, அத்தை துர்க்கா.. .மறைந்த முன்னோர்களின் காலணிகளை வழிபாட்டறையில் வைத்து வணங்கும் வழக்கம் இவர்களிடம் உண்டு..
கால மாற்றத்திற்கேற்ப அக்கால மனிதர்களிடமும் மன மாற்றம் வந்து விடுகிறது.. நிலங்களை சாகுபடி செய்யும் மக்களுக்கே வழங்க இந்திரநாத் முடிவு செய்கிறார்..அதை அறியாது கிளர்ச்சியாளர்கள் அவரை கொன்று விடுகின்றனர்..
புனைவுகள் கற்பனைகளைக் கோருகின்றன..கற்பனைச் செய்ய வேண்டுமெனும் தங்கள் காணொலிப் பேச்சு ஒரு இடைவெளிக்குப் பின் இப்புனைவை வாசிக்க உள் நின்று ஊக்கியுள்ளது..மகிழ்ச்சி..
முத்தரசு வேதாரண்யம்