நிர்மால்யா உரை, கடிதம்

அன்புள்ள ஜெ

நிர்மால்யா நிகழ்வில் உங்கள் உரை சிறப்பாக இருந்தது. ஓர் எளிய வாழ்த்தாக இல்லாமல் முழுமையான ஓர் உரையாக அமைத்திருந்தீர்கள். மலையாள- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும் பொறுப்புடன் பட்டியலிட்டு, நிர்மால்யாவின் மொழிபெயர்ப்புப் பணியையும் விளக்கிய உரை. நண்பருடனான நீண்ட உறவின் இனிமையும் அந்த உரையில் இருந்தது.

கிருஷ்ணா

அன்புள்ள ஜெ

நிர்மால்யா நிகழ்வில் நீங்கள் திருச்சியில் இருந்து நேராக அரங்குக்கே வரவிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். ஆச்சரியமாக இருந்தது. நண்பரின் பொருட்டு நீங்கள் செய்த அந்தப் பயணம் மனநிறைவளிப்பது. முழு நிகழ்விலும் நான் இருந்தேன். மிகுந்த பயனுள்ள உரைகள். ஒட்டுமொத்தமாகவே மலையாள இலக்கியச் சூழல் பற்றிய ஒரு பேச்சாக அவை அமைந்தன. பி.ராமன் அதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

உங்களைச் சந்திக்க முடிந்ததிலும் மகிழ்ச்சி (உங்கள் சட்டையும் நன்றாக இருந்தது)

ஆனந்த்குமார்

முந்தைய கட்டுரைஅறைகூவலும் நட்பும், கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: தமிழ்ப்பிரபா