கவிதைகள் இதழ், செப்டெம்பர்

அன்புள்ள ஜெ,

செப்டம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ஸ்ரீநிவாச கோபாலன் தொகுத்தளிக்கும் க.நா.சு.வின் கவிதை குறித்த கட்டுரைத் தொடர் (3) – புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் கட்டுரையுடன் எழுத்தாளர் கமலதேவி, கவிஞர் மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் தேவதேவனின் சமீபத்திய கவிதை நூல்களுக்கு எழுதிய வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தேவதேவனின் சில கவிதைகளும் இவ்விதழில் உள்ளது.

சென்ற இதழில் வெளிவந்த  வே.நி. சூர்யாவின் காலம், கவிதை – இரண்டு உரையாடல்கள் கட்டுரைக்கான எதிர்வினைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன.

https://www.kavithaigal.in/

 

நன்றி

ஆசிரியர் குழு

மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

முந்தைய கட்டுரைமாரிட்ஜானின் உடல்- கடிதம்
அடுத்த கட்டுரைசு. வெங்கடேசன்