தமிழ் இலக்கியப் பரப்பில் விடுதலைக்கு முன்னர் தொடங்கப்பட்டு, நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் பல ஆண்டுகள் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ் ‘சிவாஜி’. மணிக்கொடி இதழை மையமாகக் கொண்டு தொடங்கிய தமிழ் நவீன இலக்கிய அலை மணிக்கொடி இதழின் மறைவுக்குப் பின்னர் சிவாஜி இதழில் நீடித்தது. தமிழ் நவீன இலக்கியம், மரபிலக்கியம் இரண்டுக்கும் இணையான பங்களிப்பை ஆற்றிய இதழ் என சிவாஜி மதிப்பிடப்படுகிறது.
தமிழ் விக்கி சிவாஜி