தீபம் தமிழின் குறிப்பிடத் தகுந்த ஓர் இலக்கிய இதழ். இருபத்து மூன்று வருடங்கள் வெளியானது. இலக்கிய இதழின் பொதுவான அனைத்து அம்சங்களுக்கும் இடமளித்தது. நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், கேள்வி-பதில்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் முக்கியத்துவமளித்து வெளியிட்டது. பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது.
தமிழ் விக்கி தீபம் இலக்கிய இதழ்