இரு தொகுப்புகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

அண்மையில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வாங்கிய சிறுகதைத் தொகுப்பு விஷால்ராஜா என்னும் புதிய எழுத்தாளரின் . ரேமண்ட் கார்வரின் கதைகளிலுள்ள அமைதி அக்கதைகளில் உள்ளது. ஒரே ஒரு கதை மட்டும் கடல் சார்ந்த படிமங்களுடன் கொஞ்சம் உத்திச்சோதனைபோல் இருந்தது. என் தனிப்பட்ட ரசனையில் அத்தகைய கதைகள் பிடிப்பதில்லை. அவற்றுக்கு அசல்தன்மை கம்மி என்பது என் கருத்து.‘கிரேஸி இல்லம்’ முக்கியமான கதை. சாட்சி, நிழலின் அசைவு ஆகியவையும் சிறந்த கதைகள். தலைப்புக்கதை கூர்மையானது, ஆனால் மிக அமைதியானது. தொகுப்பை மனசுக்கு அணுக்கமானதாக ஆக்குவது அந்தக்கதைதான். ஒரு வகையில் எங்களூக்காரரான பா.திருச்செந்தாழையின் கதைகளின் உலகம் சார்ந்தது அது

சரவணக்குமார் கேசவன்

அன்புள்ள ஜெ

நின்றெரியும் சுடர் என்ற தொகுப்பை சென்னையில் விஷ்ணுபுரம் விருதுவிழாவிலே வாங்கினேன். அழகான கதைகள் கொண்ட தொகுப்பு. இளம்படைப்பாளி ஒருவர் வாழ்க்கையைப் பற்றிய இத்தனை நுணுக்கமான பார்வையுடன் எழுதியிருப்பது மனமகிழ்ச்சியை அளிக்கிறது. ஜெயன் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

சா. மோகன் சுந்தர்

நின்றெரியும் சுடர்- சுதா ஶ்ரீநிவாஸன்

திருவருட்செல்வி – வாசிப்பு

எளியவர்களின் இயலாமை

திருவருட்செல்வியும் யோவானும்

திருவருட்செல்வி, கடிதம்

திருவருட்செல்வி, கடிதங்கள்

இலக்கியம்,அழகியல், வாழ்க்கை -ஒரு கடிதம்

கதைகளின் நேர்மை – கடிதம்

முந்தைய கட்டுரைஆலயக்கலைநூல்கள்- ஜெயக்குமார்
அடுத்த கட்டுரைஅல் கிஸா – சி.சரவணகார்த்திகேயன்