பின்தொடர்வது, கடிதம்

அன்புள்ள ஜெ

இன்று ஒரு அருமையான சர்ப்ரைஸ். நான் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க புத்தகக்கடைக்கு ஆர்டர் போட்டிருந்தேன். என் மகள்தான் அதெல்லாம் செய்வாள். வந்து  சேர்ந்தது ஒரு சிறிய புத்தகம். பின் தொடரும் பிரம்மம். நான் நாய் ஆர்வலன் என்பதனால் அதை உடனே படிக்க ஆரம்பித்தேன். அற்புதமான சிறிய நூல். நாய்களைப் பற்றியெல்லாம் நிறையவே எழுதப்பட்டுள்ளது. நாய் அனுபவமே ஒரு புத்தகமாகத் தமிழில் இப்போதுதான் வருகிறது என நினைக்கிறேன். ஒரு எளிமையான உணர்ச்சிகரமான நூலாக இல்லாமல் ஆன்மிகமான அனுபவமாகவும் அதை மாற்றியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஜெ.திவாகர்

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் மிகப்பெரிய நூல்களை எல்லாம் எழுதியிருக்கிறீர்கள். நான் உங்கள் நாவல்களை எல்லாம் இனிமேல்தான் படிக்கவேண்டும். ஆனால் அண்மையில் வாசித்த துளிக்கனவு எனக்கு மிகப்பெரிய அனுபவத்தைக்கொடுத்த நூல். சின்னச்சின்ன அனுபவக்குறிப்புகள். பல அனுபவங்களை அற்புதமான சிறுகதைகள் போல எழுதியிருக்கிறீர்கள்.

ஸ்ரீதர் ராமானுஜம்

முந்தைய கட்டுரைசிவம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிங் விஸ்வா