இரா.முருகன், கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

2024 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் இரா.முருகனுக்கு அறிவிப்பு கண்ட கையோடு அவருக்கு வாழ்த்து சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். அழைத்தபோது அவர் பேசவில்லை.

2016 ஆம் ஆண்டு மூத்த ஆசிரியர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்த போது. எழுத்தாளர் அமர்வில் இரா. முருகன் அவர்களை சந்தித்துள்ளேன் .

விருது அறிவிப்பு வந்த  அன்று லண்டன் வாழ் கவிஞர் ராஜேஸ் எங்கள் சுக்கிரி உலக குழுமத்தில் ஒரு கோரிக்கை வைத்தார்.விருது பெறும் எழுத்தாளரின் நூல்களை வாசித்து,விவாதிக்கலாம் என.ஆஸ்திரேலியா கலா முன்மொழிய திருச்சி சரவணகுமார் நூல்களின் பட்டியலைத் தந்தார்.சுவிட்ச்லாந்து வாழ் கணேஷ் உடனே சுக்கிரி இரா. முருகன் வாசிப்பு வட்டம் எனும் கிளை குழுவை தொடங்கினார்.

25 பேர் கொண்ட குழுவில் ஒன்பது பேர் பெண்கள்.முதலில் மூன்று விரல் நாவலை முதலில் வாசிக்க ஆரம்பித்தோம்.இரண்டே நாட்களில் 10பேர் மூன்று விரல் நாவலை வாசித்து கருத்துகளை பகிர தொடங்கினர்.இப்போது அரசூர் வம்சம் நாவல் கூட்டு  வாசிப்பில் உள்ளது.

சுக்கிரி வாசிப்பு வட்டம் சார்பாக எழுத்தாளர் இரா.முருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.விழாவில் சுக்கிரியன்கள் விருது பெறும் எழுத்தாளரின் நூல்களை வாசித்து கேள்விகள் கேட்க இப்போதே தயாரகிகொண்டிருக்கிறார்கள்.

ஷாகுல் ஹமீது.

அன்புள்ள ஜெ,

இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதறிந்து மகிழ்ச்சி. வண்ணதாசனுக்கு  விருது வழங்கப்படும் விழாவில்தான் இரா.முருகன் பற்றி நான் கேள்விப்பட்டேன். அவருடைய அரசூர் வம்சம் நாவலை வாங்கி வாசித்தேன். அந்நாவலை முதலில் வாசிக்க கடினமாக இருந்தது. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக கதையோட்டம் பிடிபடவில்லை.ஆனால் எல்லா பக்கங்களும் சுவாரசியமாக இருந்தன. நான் பொள்ளாச்சி அருகே வளர்ந்தவன். ஆகவே அந்தப் பாலக்காட்டுப் பகடிகள் எனக்குப் புரிந்தன. பாலக்காட்டு மாமி சென்னைக்கு வந்து, பக்கத்துவிட்டு மாமா இரவெல்லாம் இருமுவதைக் கண்டு அனுதாபத்துடன் அவர் மனைவியிடம் “என்ன ஆச்சு? ராத்ரியெல்லாம் குரைச்சுண்டே இருந்தார்?” என்று கேட்கும் இடத்தை வாசித்து வெடித்துச் சிரித்தேன். மெல்ல மெல்ல அந்நாவல் ஒரு கதை அல்ல. அது ஒரு  வாழ்க்கை மட்டும் என்று புரிந்தது. முக்கியமான படைப்பு

ஸ்ரீதர் முருகசாமி

இரா.முருகன், விருது உரைகள்

இரா.முருகன், வாழ்த்துக்கள்

இரா.முருகன், கடிதங்கள்

இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்

இரா.முருகன், கடிதங்கள்
இரா முருகன், கடிதங்கள்
இரா முருகன், விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்
இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம், கடிதங்கள்

 

 

முந்தைய கட்டுரைசிறுமைகளை கடந்து…கடிதம்
அடுத்த கட்டுரைசாம்ராஜ்