அன்புள்ள ஜெ
இரா முருகன் விஷ்ணுபுரம் விருது பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக வாழ்த்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று வெளியான கீரனூர் ஜாகீர்ராஜா மற்றும் ராம்குமார் இருவரது கடிதத்திலும் இரா முருகனின் படைப்புலகுக்கு இருக்கும் குறைவான வாசக பரப்பு சுட்டி காட்டப்பட்டிருக்கிறது.
இந்த நேரத்தில் சென்ற ஆண்டு சென்னை நற்றுணை இலக்கிய வட்டம் சார்பில் எடுக்கப்பட்ட இரா முருகனின் படைப்புலகம் குறித்த அரைநாள் கருத்தரங்கை குறிப்பிட வேண்டும். அந்த கருத்தரங்கின் மூலமாகவே இரா முருகன் அவர்களின் படைப்புலகை அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது அரசூர் வம்சம் நாவலை மட்டும் வாசித்திருந்தேன். விருது விழாவை ஒட்டி முழுமையாக வாசிக்க வேண்டும். அந்த கருத்தரங்கை ஒட்டி வாசித்த அரசூர் வம்சம் நாவல் குறித்த வாசிப்பனுபவத்தை கடிதம் எழுதி பகிர்ந்து கொண்டேன். அதனை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இக்கடிதத்துடன் இணைக்கிறேன்.
நற்றுணை இலக்கிய வட்டம் எடுத்த இரா முருகன் படைப்புகள் குறித்த அரைநாள் கருத்தரங்கின் காணொளிகளின் இணைப்புகளை கொடுக்கிறேன்.
கடலூர் சீனு உரை (தியூப்ளே வீதி நாவலை த்மிழ் புனைவு பரப்பில் வைத்து):
https://www.youtube.com/watch?v=p3q8Z6bvGLQ
காளிப்பிரசாத் உரை (நாவலுலகம்):
https://www.youtube.com/watch?v=1QXNqMeVycE
விஜயபாரதி உரை (1975 நாவல்):
https://www.youtube.com/watch?v=zzxV3oNTBKA
சுரேஷ் பாபு உரை (அரசூர் நாவல்கள்):
https://www.youtube.com/watch?v=tWsQyo_VwnY
இளம்பரிதி உரை (லண்டன் டயரி):
https://www.youtube.com/watch?v=Iei4XNKsqFs
செந்தில் ஜெகந்நாதன் உரை (தினை அல்லது சஞ்சீவி):
https://www.youtube.com/watch?v=xz_HFWY3B-0
தென்றல் சிவகுமார் உரை (சிறுகதைகள்):
https://www.youtube.com/watch?v=PcsCT31zoZY
ஆர்.வி.எஸ் உரை (ரெட்டைத் தெரு):
https://www.youtube.com/watch?v=-vDZkafGdjo
ஜெயராமன் ரகுநாதன் வாழ்த்துரை:
https://www.youtube.com/watch?v=5uFpcBwUVtA
இரா முருகன் ஏற்புரை:
https://www.youtube.com/watch?v=Eg6Us9XtDtk
சக்திவேல்
இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்