மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு

பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் இரண்டு மாதத்துக்கு ஒத்திப்போடத் தீர்ப்பளித்துள்ளது. நேற்று திருவனந்தபுரத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதுவே நிகழும் என்று சொன்னார் -மூன்று மாதம் ஒத்திப்போடக்கூடும் என்று. காரணம், இந்த சிக்கலான வினாக்களுக்கு உடனடியாக விசாரணையை முடிக்கமுடியாது. ஆகவே கால அவகாசம் அளிக்கப்படும்.

வழக்கு ஒத்திப்போடப்படும் என்றால் அனேகமாக மீண்டும் சிலமுறை ஒத்திப்போடப்படும் என்றும், கடைசியில் தூக்கு ரத்தாக  பெரும்பாலும் வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார். ஏனென்றால் பொதுவாக இந்திய நீதிமன்றங்கள் தூக்குக்கு எதிரான மனநிலையுடன் உள்ளன. தூக்கு ரத்துசெய்வதற்கான முகாந்திரங்கள் எதையுமே அவை நிராகரிப்பதில்லை. ஆகவே நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

போராடியவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லது நிகழவேண்டுமென ஆசைப்படலாம்

http://www.maalaimalar.com/2011/08/30103505/murugan-santhan-perarivalan-pu.html

தூக்கிலிருந்து மன்னிப்பு

தூக்கு-கடிதங்கள்

முந்தைய கட்டுரைஹனீபா-கடிதம்
அடுத்த கட்டுரைஇலங்கையில் இருந்து ஒரு கடிதம்