ஜி.அப்பாத்துரை எம்.ஒய். முருகேசம் இ.நா.அய்யாக்கண்ணு புலவர் ஆகியோருடன் இணைந்து ‘இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார்.பௌத்தம் சார்ந்து சிறு நூல்கள் பல எழுதினார்.ஏ.பி.பெரியசாமி புலவருடன் இணைந்து சாக்கிய சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1954-ல் அம்பேத்கர் கோலாருக்கு வந்து பௌத்த சாக்கிய சங்கச் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்துகொண்டார். பின்னாளில் அம்பேத்கர் பௌத்தமதம் மேற்கொண்டதற்கு அது தூண்டுதலாக அமைந்தது