நிர்மால்யா நவீன மலையாளப் படைப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருபவராக அறியப்படுகிறார்.குரு நித்ய சைதன்ய யதியை தமிழில் அறிமுகப்படுத்தினார். நிர்மால்யா மொழிபெயர்த்த நித்ய சைதன்ய யதியின் ‘மானுட மைந்தன் இயேசு’ என்ற புத்தகத்தை நாராயண குருகுலம் வெளியிட்டது. ‘நன்மைக்கான பாதை’ என்ற நூலிலுள்ள கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு தினமணி கதிரில் வெளிவந்தது.