Now, at a crossroads in my life, I am determined to reconnect with my inner self and explore the depths of wisdom. Your philosophy sessions offer a beacon of hope, a chance to reignite my intellectual curiosity.
The horse of fire
ஒரு பெண்ணாக நான் இன்று ஓர் அர்த்தமின்மையை வாழ்க்கையில் உணர்ந்துகொண்டிருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது மிகவும் சூட்டிகையான பெண்ணாக இருந்தேன். கல்லூரியிலும் அப்படித்தான். மிகச்சிறப்பாக படித்தேன். கலைநிகழ்ச்சிகளில் பரிசுகள் பெற்றேன். தினமணி இதழில் 6 கதைகள் அப்போதே எழுதியிருக்கிறேன். அதன்பிறகு வேலை. வேலையை விட்டு கல்யாணம் செய்துகொண்டேன். குழந்தைகள். வாழ்க்கை அப்படியே நீண்டுவிட்டது.