அமெரிக்கன் கல்லூரி ,மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரி தென் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்று. கல்விக்கூடம் என்பதற்கு அப்பால் சுதந்திரமான தேடலையும் கலையிலக்கிய ஆர்வங்களையும் அனுமதித்தது.  அந்நிறுவனத்தில் பயின்ற யுவன் சந்திரசேகர், பாலா போன்ற பலரிடம் அது உருவாக்கிய ஆழமான மனப்பதிவுகளைப் பார்க்கையில் எனக்கு அப்படி ஒரு கல்விக்கூட அனுபவமே இல்லையே என்ற ஏக்கமே எழும்.

அமெரிக்கன் கல்லூரியின் அமெரிக்க தொடர்பு பிரிவு ஒன்றுக்காக நான் ஒரு சிறுகதைப்பட்டறை நடத்தியிருக்கிறேன்,கொடைக்கானலில். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது அது.  ஆனால் என் நண்பரும் தமிழ் எழுத்தாளருமான  சு.வேணுகோபால் எல்லாத் தகுதிகளும் இருந்தும் இந்து என்பதற்காக அங்கே பணியாற்றிப் பணிநிரந்தரம் பெற முடியாமல் வெளியேற்றப்பட்டபோது அந்நம்பிக்கை சிதைந்தது

அமெரிக்கன் கல்லூரியின் இன்றைய சிக்கல்களைப்பற்றி இளங்கோ கல்லானை எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரைஎஸ்.எல்.எம்.ஹனீஃபா
அடுத்த கட்டுரைஹனீபா-கடிதம்