தமிழ்விக்கி – தூரன் விழா 2024: அழைப்பிதழ்

மோ.கோ.கோவைமணி தமிழ் விக்கி

பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி

தமிழ் விக்கி

தமிழ் விக்கி தூரன் விருது

நண்பர்களுக்கு

வணக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ விழா ஈரோட்டில் நிகழவிருக்கிறது.

தமிழ்ப்பண்பாட்டாய்வில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருதை சுவடியியல் ஆய்வாளர் மோ.கோ.கோவைமணி அவர்களுக்கு வழங்குகிறோம்.

நிகழ்வு நாள், பொழுது: ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை. 

நிகழ்வு இடம்: ராஜ்மகால் திருமணமண்டபம், கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை. ஈரோடு

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக

1. கல்வெட்டு அறிஞர் வெவேதாசலம்

2. குகை ஓவிய அறிஞர் காந்திராஜன்

3. காட்டுயிர் ஆராய்ச்சியாளர் பஜெகநாதன்

4. மலையாள விமர்சகர் எம்என்காரசேரி

5. விருதுபெறும் முனைவர் கோவைமணி

ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

விருதுவிழாவை ஒட்டி வழக்கம்போல சிறப்பு நாதஸ்வர நிகழ்வு நடைபெறும். பெரியசாமித் தூரன் அவர்களின் தமிழிசைப்பாடல்களை சின்னமனூர் ஏ.விஜய்கார்த்திகேயன், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜா ஆகிய இசைக்கலைஞர்கள் வாசிப்பார்கள். இரண்டு மணி நேரம் இந்த இசைநிகழ்வு நடைபெறும்.

இந்நிகழ்வுக்கான பாடல்கள் முன்னரே அளிக்கப்பட்டுள்ளன. இந்த இசைநிகழ்வில் கலந்துகொள்பவர்கள் அவ்விசைப்பாடல்களை கேட்டுவிட்டு வருவது இசைக்குள் நுழைவதற்கு மிக உதவியானதாக அமையும்.

பார்க்க

தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்

தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்

இந்த நிகழ்வு நடக்கும் ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு ராஜ் மஹால் கல்யாணமண்டபத்தில் வழக்கம்போல வாசகர்களும் நண்பர்களும் ஆகஸ்ட் 14 அன்று இரவு  தங்கலாம். எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட விஷ்ணுபுரம் நண்பர்கள் அங்கு தங்குவார்கள்

தங்க விரும்புபவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://forms.gle/Wk3F2SxdbwHKmbuL8

தொ எண்: 9500384307

விழாவிற்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ராஜ்மகால் கல்யாணமண்டபத்திற்கு விழா மாலையில் வந்துசேர்வதற்கு வண்டி தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ளலாம். விஷ்ணுபுரம் அலுவலகம் பேருந்துநிலையம் அருகே உள்ளது. அங்கே வருபவர்களுக்கு வண்டி ஏற்பாடு செய்யப்படும். தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.(தொ எண்: 9500384307) ஆட்டோ மற்றும் பேருந்தில் எளிதில் வரமுடியும்

நல்வரவு

விழாக்குழு 

தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு

முந்தைய கட்டுரைஇன்று கோவை கட்டண உரை
அடுத்த கட்டுரைWhat if Hinduism becomes extinct?