அடைவன…

வாழ்வின் ஒரு கட்டத்தில் காவியத்தன்மை கொண்ட பெருநூல்களை நோக்கிச் செல்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். உலகியல் பணிகள் குறைந்து வரும்போது உருவாகும் மாபெரும் வெறுமையை அவர்களால் வெல்ல முடியும். பிறிதொரு உலகில் வாழமுடியும்.

நெல்லையைச் சேர்ந்த சிவமீனாட்சி செல்லையா அவ்வாறு கம்பராமாயணம், வெண்முரசு இரண்டிலும் வாழ்பவர். கம்பராமாயண வாசிப்புக்காக விஷ்ணுபுரம் நண்பர்கள் உருவாக்கியுள்ள இம்பர்வாரி என்னும் இணையக்குழுமத்தில் இணைந்து பல ஆண்டுகளாக கம்பராமாயணம் வாசிக்கிறார்.

வாசிப்பதை எழுதுவது என்பது தனக்கே தொகுத்துக்கொள்வதற்காகவே. தன்னுடைய அகத்தை கண்முன்னால் மொழிவடிவாக காண்பதற்காகவே

அவருடைய முதல் கட்டுரை

ஆரண்யத்தால் அடைவன – ரா. சிவமீனாட்சி செல்லையா

முந்தைய கட்டுரைகுருகு, ஆகஸ்ட் இதழ்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி-தூரன் விழா விருந்தினர்: ப.ஜெகநாதன்