அண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்

P:  So it has been called off! I am happy that the old man has survived to fight another battle.

me:  ஆம்

P:  I see from your website that you have published our exchange of views.

me:  கடைசி நேர காங்கிரஸின் பேரம்– இவர்கள் ஒரு புள்ளிக்குமேல் போகமுடியாது என்று தெரிந்ததுமே பின்வாங்கியது- பிரமிப்பூட்டுகிறது. பேர நிபுணர்கள். ஆனால் அந்தக் கடைசி சிலமணிநேர அழுத்தத்தை கிழவர் அபாரமாகத் தாண்டி வந்தார்

ஆம். உங்கள் வரிகள் முக்கியமானவை என எனக்குப் பட்டன

P:  Most people forget that it is not the content of this agitation that is important.   What is important is that this is one struggle when persons from every walk of life felt that he or she was part of it. This hasn’t happened for a long long time.
As Mao said a single spark can start a prairie fire.

Anna has perhaps ignited that spark

me:  ஆம்.அதையே நான் எழுதினேன்

P:  This will embolden the people and they will now struggle for bigger things hopefully.

me:  ஆம்

P:  They may take many forms but eventually the struggle for a true cause will succeed. It may take generations, but mankind will become kinder and more equal This is just a comma in a long long sentence. The full stop is years ahead.

me:  ஆம். அந்த நம்பிக்கை கொண்டவன் நான். எந்த மாற்றமும் பொதுவாக எல்லார் கண்ணுக்கும் படுவதில்லை. கடந்த 50 வருடங்களில் நாம் பெண்களைப்பற்றிக் கொண்டுள்ல எண்ணம் எப்படி மாறியிருக்கிறது என்பதையே பார்த்தால் தெரியும்– நாம் வெகுவாக மாறிக்கொண்டிருக்கிறோம்…ஊழலுக்கு எதிராக ஒரு சமூக மாற்றம் ஆரம்பித்துள்ளது என்பதே எனக்குத்தோன்றுவது… அது வளரட்டும்

P:  Yes. As a person who had a ringside view of big ticket corruption i will not hesitate to use any weapon to beat it with.

me:  மெதுவாக அந்த தனிப்பட்ட பொறுமையின்மைகள் கலந்து ஒரு பெரிய சமூகக் கருத்தாக ஆகிக்கொண்டிருக்கிறது.

P:  Indeed! The parliament, I think, was magnificent. It showed Anna the limits of his struggle. Anna also understood that

me:  ஆம், எல்லாவற்றுக்கும் அப்பால் நாம் ஜனநாயகவாதிகள்தான். இன்னும் பல ஆசிய ஆப்ரிக்க நாடுகளைப்போல நாம்  சீரழிந்துவிடவில்லை. அதற்கான ஆதாரம் இது

P:  The quality of the speeches was also of a very high order. The Hindi speeches (I didn’t like Lalu’s) were particularly good.

me:  அதுவும் இயல்பே. ஆங்கிலத்தில் நல்ல அரசியலுரைகளை செய்வது பெரியவிஷயமல்ல. ஆங்கிலம் அதற்கான மொழி, ஆங்கிலம் படித்தவர்கள் அதற்கான தயாரிப்புள்ளவர்கள்.

P:  I agree. That is why i liked the Hindi speeches much better.   Of Anna’s lieutenants Prashant and Medha are clear in that the country is being run by a corrupt group supervised by the big corporate thugs

me:  அது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதை ரகசியமகாச் செய்யமுடியாது என்றநிலை வருவதே முதல் படிநிலை. அதை லோக்பால் அமைப்புக்கான போராட்டமேகூட கொண்டுவரக்கூடும்

P:  Anna too said this again and again.

P:  I agree  Every political party has persons who are repulsed by this. Even BJP has such persons!
I  am sure now Congress and BJP will realize that they can’t have secret deals and bulldoze the people of this country
Sent at 7:29 AM on Sunday

me:  ஆம்

லோக்பால் வருமென்றால் அது இடதுசாரிகளின் ஆயுதமாகவே இருக்கும்– இப்போது தகவலறியும் உரிமைச்சட்டம் போல.
ஒரு தொழிற்சங்க இதழில் 70 சதவீத இடம் இப்போதெல்லாம் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெற்ற தகவல்களை அளிப்பதாகவே உள்ளது!!

P:  yes! Lokpal will of course sire some black mailers like Cho laments. But they will also eventually be exposed. Cho was extremely foolish. Missing the wood for the trees.

me: ஆம். ஆனால் அவரது நோக்கம் ஐயத்துக்குரியது. அவர் சில தொழிலதிபர்களுக்காகப் பேசுபவராக ஆகி நீண்டநாளாகிறது

P:  I am not sure about that. That guy wants to be different.

me:  இருக்கலாம்

P:  He has never hidden his conservatism and support for unbridled capitalism That is a normal middle class brahmin’s stand!
He suspects everything. Every other person is a thief, except the ones chosen by him!

me:  ))

P:  Every other person’s motive is suspect expect the ones admired by him!

me:  ஆம்

P:  This is not an abuse of brahmins. This is their defence mechanism. But Cho doesn’t require this mechanism

me:  ஆம். தமிழகத்தின் எந்த அரசியல் எழுத்தாளரும் ஒரு வரலாற்றுத்தருணம் நிகழும்போது அதற்கேற்ப உயரவில்லை   இது மிக துரதிருஷ்டவசமானது.

P:  yes. Sectarianism is the running theme of major political writers in Tamil of those who can write well

me:  ஒரு விஷயத்தை அந்த சூழலில் மட்டும் வைத்து பார்த்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதே இல்லை.

P:  Anna was inconsistent in the sense that Gandhi was inconsistent. He too said Swaraj in one year in 1921

me: ஆம். எல்லா செயல்வீரர்களையும் கொஞ்சம் மிகைப்படுத்திக்கொண்ட தன்னம்பிக்கையே இயக்குகிறது

முந்தைய கட்டுரைஒரு வரலாற்றுத்தருணம்
அடுத்த கட்டுரைஇந்தப்போராட்டத்தில்…