யான் அறக்கட்டளை, ஒரு நகர்வு

பெருந்தலையூர் வெற்றிவிழா

ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர் 

ஆசிரியருக்கு, 

நம்பிக்கையுடன் ஒரு துவக்கம். அறக் கல்வி துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இப்போது இரண்டு மாவட்டங்களில் சுமார் 50 கல்லூரி மாணவர்கள் உள்ளனர். மூன்று பேர் நிரந்தரமாக யான் அறக் கட்டளையில் இணைந்து விட்டனர். பெருந்தலையுயூர் கிராமத்தை ஏற்று ஆறு மாதங்கள் ஆகிறது. இங்கு தூய்மையாக்கம், குடிமைப் பண்பு பிரச்சாரம் போன்றவற்றை இந்த அறக் கல்வி மாணவர்கள் துவங்கி தங்கி நிகழ்த்தி வருகிறார்கள். அனு ஶ்ரீ என்கிற மாணவி ஒருங்கிணைப்பில் இது உள்ளது. இந்நாட்கள் இவர்களுக்கு ஒரு கள கொண்டாட்டம், நீடித்த திருவிழா. இது நீங்கள் முன் வைக்கும் சிற்றலகு அரசியல் தான். 

இங்கு யான் அறங்காவலர் பிரதீப்புக்கு வலுவான தொடர்பு உள்ளதால் பணி சற்று எளிது. இப்போது இந்த ஜூன் 2024 முதல் மேலும் ஒரு கிராமம் மீண்டும் ஒரு கால் வைய்ப்பு. பொள்ளாச்சி அருகே உள்ள சிறுகளங்தை ஊராட்சி. இங்கு தூய்மையாக்கம், அடர் வனம் உருவாக்குதல் மற்றும் குடிமைப் பண்பு பிரச்சாரம் போன்றவற்றை செய்ய இருக்கிறோம். மாணவி வைசிகா ஶ்ரீ இரண்டு ஆண்டுகள் தங்கி ஒருங்கிணைக்கிறார், லோகமாதேவி ஆலோசனை தருகிறார், திருப்பூர் ஆனந்த குமார் மேற்பார்வை. முழுக்க பெண்களால் இது மேற்கொள்ளப்படும். 

அரங்கசாமியின் குல தெய்வக் கோயில் உள்ள இடம் என்பது தவிர்த்து பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் இந்த மாணவிகள் ஈட்டியுள்ள கள அனுபவம் இதை ஈடு செய்யும். இப்போது இவர்கள் கல்லூரி முடிந்து இளமையில் நுழைகிறார்கள். இது இவர்கள் ஆளுமை உருவாகும் காலம். இந்த ஊருக்கு இரண்டாண்டு வசந்த காலம். 

கிருஷ்ணன், ஈரோடு.

முந்தைய கட்டுரைபெருங்கலையின் வருகை, கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்:எம்.என்.காரஸேரி