தமிழ்விக்கி தூரன் விழா விருந்தினர்: வெ. வேதாசலம்

தமிழ்விக்கி- தூரன் விருது 2024 வரும் ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் – 15 மாலை வரை ஈரோட்டில் நிகழ்கிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வெட்டாய்வாளர் வெ.வேதாச்சலம் கலந்துகொள்கிறார்.

வெ. வேதாசலம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளைத் தன் முதன்மை ஆய்வுக் களமாக கொண்டு மேற்கொண்ட சமணபள்ளிகள் பற்றி கள ஆய்வுகள் முதன்மையானவை. தென்னிந்தியாவில் சமணம் சார்ந்து கிடைக்கும் பழமையான கல்வெட்டுகள் வெ. வேதாசலத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை. மதுரையில் தற்போது எஞ்சியுள்ள சமணக் குன்றுகளுக்கு நேரடியாக சென்று கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அவற்றை கொண்டு வந்தவர்.

வெ. வேதாசலம் பாண்டியர் ஆட்சி கால மதுரை நாகரீகம் பற்றி முழுமையாக ஆய்வு மேற்கொண்டவர். பாண்டியர் ஆட்சியில் மதுரையின் சமூக நிலவியல், ஊர்களின் வரலாறு, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து தொகுத்தவர்.

வெ. வேதாசலம்

வெ. வேதாசலம்
வெ. வேதாசலம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகல்வனக் காளி – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஇயல் ஏற்புரை