வெண்முரசு முழுப்பதிப்பு, கேள்விகள்

பெருங்கலையின் அறைகூவல்!

வெண்முரசு நூல்தொகை வெளிவந்ததை ஒட்டி சில மின்னஞ்சல்கள். நூல்தொகுப்பு ஜூலை இறுதி- ஆகஸ்ட் முதல்வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். நூல்களில் கையெழுத்திடுவது, முறையாக பெட்டிகளில் அடைத்து அனுப்புவது என்பது பெரிய பணி. அதன்பொருட்டு தனி ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அது எளிய வேலை அல்ல. பல படிகளாகச் செய்யவேண்டியது. செய்துகொண்டிருக்கிறோம். சிறிய தாமதங்கள் நிகழலாம்.

தமிழகத்தில் எந்தப் பதிப்பகமும் பெருநிறுவனம் அல்ல, இங்குள்ள பதிப்பகச் சூழல் பதிப்புலகில் பெருநிறுவனங்கள் உருவாக ஏற்றது அல்ல. (முன்பு  பி.எஸ்.ராமையா ஒரு கதை எழுதினார். ‘மணல் ஊற்று, மின் ஏற்றம்’  மணலில் தோண்டிய ஊற்றில் மின் ஏற்றம் வைக்க முடியாது. தமிழகத்திலுள்ள புத்தகச்சந்தை மிகச்சிறியது. இங்கே நூல்கள் வாங்குபவர்கள் பத்துகோடி பேரில் ஐம்பதாயிரம்பேர் மட்டுமே. அவர்களை நம்பி ஓரளவுக்குமேல் இந்த வணிகம் விரிய முடியாது. ஆகவே இங்கே இது ஒருவகை குடிசைத்தொழில்தான்.

வெண்முரசு தொகுப்பில் தனி நூல்கள் வாங்கக்கிடைக்குமா என்று பலர் கேட்டனர். கோவை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். பதிப்பகத்தில் இருந்து நேரடியாகவும்  வாங்கிக்கொள்ளலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைசோற்றுக்கணக்கு இன்றும்
அடுத்த கட்டுரைஆலமும் படுகளமும்- கிருஷ்ணன் சங்கரன்