ஜூலை 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழ் முதல் கவிதைக் குறித்து விமர்சகர், எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் எழுதிய கவிதை ரசனை கட்டுரைகள் இடம்பெறும். அத்தொகுப்பின் முதல் கட்டுரையாக ’தமிழில் புதுக் கவிதை’ என்ற கட்டுரை இந்த இதழில் வெளிவந்துள்ளது.
இதனை தொகுக்கும் முயற்சியை மேற்கொள்பவர் நண்பர் அழிசி பதிப்பகத்தின் ஆசிரியர் ஸ்ரீநிவாச கோபாலன். அவர் இதற்கு எழுதிய ஒரு முன்னுரையும் ‘க.நா. சு கவிதைக் கலை’ இடம்பெற்றுள்ளது. வீரான்குட்டி கவிதைப் பற்றி கவிஞர் வேணு வேட்ராயன் எழுதிய ரசனை குறிப்பும், முந்தைய இதழில் ப. தாணப்பன் எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியும், கல்பனா ஜெயகாந்த் கவிதைப் பற்றி கமலதேவி எழுதிய ரசனைக் குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
http://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)