கலாவிசு புதுச்சேரி வாழ் கவிஞர்கள் பலரைத் தனது இலக்கிய அமைப்பு மூலம் அறிமுகப்படுத்தினார். கவிஞர்கள் பலரை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். புதுச்சேரி வாழ் கவிஞர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராக கலாவிசு அறியப்படுகிறார். பொது வாசகர்களுக்காக, சமூகக்கருத்துக்களை வலியுறுத்தும் படைப்புகளை எழுதுபவராக அறியப்படுகிறார்.