எஸ்.வாசுதேவன், ஒரு வேண்டுகோள்

தி.பரமேஸ்வரி முகநூல் பதிவு

நண்பர்களுக்கு அவசர வேண்டுகோள்!

எழுத்தாளர் எஸ்.வாசுதேவன் தொடர்ந்து கலை, இலக்கியத் துறையில் பங்களித்து வருபவர். மேற்கத்திய இலக்கியம், கோட்பாடுகள், தத்துவங்கள், தமிழ் மரபிலக்கியங்களைப் பற்றி விரிவாக எழுதி நூல்களை வெளியிட்டவர் . 80 களிலிருந்து சிறுபத்திரிகைக் கலாசாரத்தோடு இணைந்து பணியாற்றுகிறவர். 

இரண்டு வாரங்களுக்கு முன் வீட்டுக் கழிவறையில் வழுக்கி விழுந்து கடுமையாகக் காயம் ஏற்பட்டது. முன்தலையில் காயம். விழுந்த அதிர்ச்சியில் அவருடைய வலது கால் எலும்பு (Femur) நொறுங்கிவிட்டது.

அவருக்கு ஹீமோஃபீலியா எனும் அரிய வகை நோய்  உள்ளது. ( haemophilia) காயம் பட்டால் ரத்தம் உறையாது. அது உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.  நோயாளிக்கு ஏற்ற புரோட்டின்களை ஊசிமூலம் தொடர்ந்து ஏற்ற வேண்டும். ஒரு ஊசி ரூ 8000 முதல் 12,000 விலை போகும். மேலும் ரத்தக்கசிவின் வீரியத்தைக் குறைக்கும் பொருட்டு ஒரு நாளைக்கு 10 முதல் 15 ஊசிகள் செலுத்தப்பட வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மதிப்பான ஊசி மருந்துகளை ரத்தம் உறையும் வரை செலுத்த வேண்டும். இது தொடந்து தினம் செலுத்தப்பட வேண்டியது. இது தவிர  மருந்துகள், மருத்துவருக்கான கட்டணங்கள் போன்ற இதர செலவுகள் உண்டு.

குறைவான ரத்தக்கசிவுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால்   மேற்சொன்ன ஊசியைச் செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை. முதல் மூன்று நாட்களுக்குக் கடுமையா ரத்தக்கசிவு. ஏகப்பட்ட ஊசிகள் செலுத்தப்பட்டு சிகிச்சை ஓரளவு முடிந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை தேவை.

இதுவரை 15 லட்சம் செலவாகியுள்ளது.  இது மிகப் பெரிய சுமை. மேலும் தொடர் சிகிச்சைக்கும் நிதி உதவி தேவைப்படுகிறது. இக்கோரிக்கையை ஏற்று அவருக்கு இயன்ற அளவு உதவும்படி கேட்டுக் கொள்கிறோம். நண்பர்கள், இச்செய்தியைப் பகிர்ந்து உதவுக.

வங்கிக் கணக்கு விவரம்:

Name: S VASUDEVAN

Bank: STANDARD CHARTED BANK

Branch: G.N.CHETTY ROAD, T.NAGAR

City: Chennai- 600017

Account No: 43610124085

IFSC No: SCBL0036083

GPay No:  His Daughter ( Niveditha Vasudevan) 7806867022

முந்தைய கட்டுரைஅரசியல் கடந்த கல்வி ஏன்?
அடுத்த கட்டுரைபுருஷனும் விஷ்ணுவும்