கோவை புத்தகக் கண்காட்சி கோவை கொடீஷியா அரங்கில் 19 ஜூலை 2024 அன்று தொடங்கி 28 ஜூலை வரை நடைபெறுகிறது.
இவ்வாண்டு விஷ்ணுபுரம் பதிப்பகம் பெரிய அரங்கை எடுத்துள்ளது. எண் 101 முதல் 104 வரையிலான அரங்குகள். வாசகர்கள் சந்திப்பதற்கான இடவசதி இருக்கும்.
வெண்முரசு நூல்கள் அரங்கில் கிடைக்கும். 25 ஜூலையில் ஒரு வாசகர் முழுத்தொகுதிகளையும் வாங்கினார்.
நான் இன்று ஒரு நாள் கூட (28- ஜூலை 2024) மாலை 5 முதல் விஷ்ணுபுரம் அரங்கில் இருப்ப்பேன். சந்திக்க விரும்பும் வாசகர்கள் வரலாம்.
கீழ்க்கண்ட புதிய நூல்கள் வாங்கக்கிடைக்கின்றன
கோவை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் சார்பில் புதியதாக வெளிவந்துள்ள நூல்கள்.
வேகமான வாசிப்புத்தன்மைகொண்ட நாவல். தென்னாட்டின் சிறுநகர் பின்னணியில் ஒருபக்கம் வணிகமும் மறுபக்கம் குடும்பமும் என நிகழும் இந்நாவல் ஒரு வீழ்ச்சியின் கதை, ஓர் எழுச்சியின் கதையும்கூட.
கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி மறுபதிப்பு வரவுள்ள நூல்கள்
இந்தியாவின் சமணத்தலங்கள் வழியாக சென்ற ஒரு பயணம். சமணஇந்தியாவின் முகம் வெளிப்படும் புகழ்பெற்ற நூல்
உடையாள்
குழந்தைகளுக்கான அறிவியல்புனைவு. சாகசத்திற்குப் பதிலாக அடிப்படையான வினாக்களை நோக்கிச் செல்லும் தத்துவார்த்தமான உருவகத்தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு ஒரு விந்தையுலகாகவும் பெரியவர்களுக்கு ஒரு கவித்துவ உருவகமாகவும் தோற்றம் அளிப்பது
சென்ற சில ஆண்டுகளாகவே பெரும்பிரியத்துடன் நான் நாய்களைப் பற்றி எழுதி வந்துள்ளேன். என் நாய்கள், என் நண்பர்களின் நாய்கள். அவை நாய்களைப் பற்றிய நினைவுகூரல்கள் மட்டும் அல்ல. நாய் என நம் முன் வந்து நம்முடன் உறவாடும் இந்த மாபெரும் உயிர்வெளி பற்றிய மெய்யியல் கண்டடைதல்கள், அவற்றின் கவித்துவ வெளிப்பாடுகள். நாய்களைப் பற்றிய 19 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கவிதையென, உணர்வுபூர்வமான அனுபவப்பதிவு என வாசிக்கத்தக்க இலக்கியம்
- இந்தியப் பயணம்
இந்தியாவின் மையநிலங்கள் வழியாகச் சென்ற பயணம்
கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி மறு அச்சு வெளிவந்துள்ள நூல்கள்
விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், விற்பனையுரிமை நூல்கள் அரங்கில் கிடைக்கும்.
====================================================
அஜிதன்
விஷால்ராஜா
லோகமாதேவி
அருண்மொழி நங்கை
நித்ய சைதன்ய யதி
அழகியமணவாளன்
சா.ராம்குமார்
தாமரைக்கண்ணன்
செல்வேந்திரன்
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
சு.வேணுகோபால்
சிறில் அலெக்ஸ்
சுஷீல்குமார்
எம்.கோபாலகிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன்
நரேன்
காளிப்பிரசாத்
ஜெயமோகன்