கதைகள், கனவுகள்: கடிதங்கள்

இச்சாமதி கதை

அன்புள்ள ஜெ

தங்களது இச்சாமதி கதையை மூன்றாம் தடவையாக வாசித்தேன்.புதிய பரிமாணங்கள் புலப்படுகின்றன.கதைக் காட்சிகள் ஒரு குறும்படமாய் விரிகிறது.வாழ்வின் துயரத்தில் கசியும் தத்துவங்களை பாத்திரங்களே பேசுகின்றன.நான் வாசித்த தங்களது சிறுகதைகளில் இதுவே சிறப்பு என்பேன்.வங்க நதியின் பிரவாகத்திலிருந்து இன்னும் கரைசேர முடியவில்லை.

ஜி.ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்

இச்சாமதியின் கதை மிகச்சிறிய ஒரு புள்ளி. ஊசிமுனையை ஊசிமுனையால் தொடுவதுபோல. அந்த மனநிலையைச் சொல்ல முடியாது, அதைச்சூழ்ந்த எல்லாவற்றையும் சொல்லி அதை உணர்த்திவிடலாம். அதையே முயன்றிருக்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெ

நான் அண்மையில் தொடர்ச்சியாக வாசித்தவை உங்கள் புனைவுக் களியாட்டுக் காலகட்டக் கதைகள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைப்பின்னணியில், வெவ்வேறு வகையான கதைகூறும் உத்திகளுடன் எழுதப்பட்டுள்ளது. கூர்மையாக குறிப்பாகச் சொல்லி நிறுத்தப்பட்ட பொலிவதும் கலைவதும் ஓர் அற்புதம் என்றால். ஒரு நாவல் அளவுக்கே விரியும் பத்துலட்சம் காலடிகள் இன்னொரு அற்புதம்.

நான் பல ஆண்டுகளாக தமிழில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழ்ச்சிறுகதையில் உள்ளவற்றைவிட அதிகமான சிறுகதைச் சாதனைகள், சிறுகதை வடிவங்கள் இந்தக் கதைகளில் உள்ளன. எனக்கு இவற்றில் மிகப்பிடித்தவை திபெத் பற்றிய கதைகள்தான். அவை என்னை ஒருவகையான ஆழ்ந்த மயக்கநிலையில் வைத்திருந்தன. தியான அனுபவம்போன்றவை அவை.

ராஜ்குமார் மகேந்திரன்

அன்புள்ள ராஜ்குமார்

நன்றி. அந்தக் கதைகள் அன்றைய வேகத்தின் விளைவுகள். இன்று அவற்றையும் கடந்து வந்துவிட்டேன். திரும்ப வாசிக்கையில் அக்கதைகளில் பல எனக்கே திகைப்பூட்டுவனாகவே உள்ளன

 ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
முந்தைய கட்டுரைமைத்ரி, மருபூமி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைம.வே.சிவகுமார்