தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் ஜெ. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் முனைவர் கோவை மணி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பழைய தமிழ் ஓலை சுவடிகளை வாசித்து பொருள் தேர்வதில் புலமை பெற்றவர். அழிந்து போயிருக்க கூடிய நிறைய சுவடிகளை கண்டறிந்து ஆவணப்படுத்தி, அவற்றை அச்சுக்கு மாற்றுவதை வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வந்திருக்கிறார். மாணவர்களுக்கு பழைய சுவடியை வாசிப்பதற்கான பயிற்சியை அளித்து வந்திருக்கிறார் போன்ற அவரைப் பற்றிய மிக முக்கிய தகவல்கள் அனைத்தையும் தமிழ் விக்கியின் வழி அறிந்து கொண்டேன்.
கோவை மணி என்ற பெயரை கேட்டதும் அவர் கோவையை சேர்ந்தவராக இருப்பார் என்பதனால் அப்பெயர் பெற்றிருப்பார் என்ற ஒரு பிம்பத்தை மனம் உருவாக்கிக் கொண்டது. ஆனால் அவர் வாழ்க்கையில் கோவைக்கு எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை, பிறந்தது திருவள்ளுவர் மாவட்டத்தில் படித்தது சென்னையில் ஆசிரியராக அமைந்தது தஞ்சையில். என்ன காரணத்தினால் பள்ளியில் சேர்க்கும் பொழுது அவர் இயற்பெயர் கோவை மணி என்று மாற்றப்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ‘கோவைக்கு‘ க்கு வேறொரு பொருளும் இருக்கலாம்தான்.
ஆனால் எளிதில் மறக்கக்கூடிய பெயர் அல்ல ஒரு தனித்துவமான பெயர் அவருடைய தமிழ் சுவடி சேவையைப் போலவே. இங்கு லட்சக்கணக்கான இன்ஜினியர்களும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் ஆனால் லட்சத்தில் ஒருவருக்கு தான் அரிய சுவடிகளின் அருகமைய வாய்ப்பு அமையும், அதிலும் கோடியில் ஒருவர் தான் மனம் நிறைவுறும்படி சிறப்பாக செயல் புரிந்திருந்திருப்பார். அப்படிதக்க ஆளுமையை அறிமுகப்படுத்தியதிற்கு தமிழ் விக்கி ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள்
பேராசிரியர் கோவை மணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
பாண்டியன் சதீஷ்குமார்
கொரியா
அன்புள்ள ஜெ
கோவைமணி அவர்களின் காணொளிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுவடியியல் பற்றிய தொடர்ச்சியான அறிமுகங்களைச் செய்கிகளைச் சொல்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகளில் தொடர்ச்சியாக வகுப்புகள் எடுத்துள்ளார். சுவடியியல் பற்றி அறிவதற்கு இன்றைக்கு தமிழ்ச்சூழலில் உள்ள ஓர் அரிய வாய்ப்பு இது. சுவடியியலின் அடிப்படைகள், சுவடிகளை பேணுவது, வாசிப்பஹு, பாடபேத வடிவங்கள் அனைத்தையும் மிக விரிவான வகுப்புகளாக நடத்தியுள்ளார். மிகப்பெரிய பணி. அவருக்கு தூரன் விருது அளிக்கப்படுவது மிகப்பொருத்தமானது
சிவக்குமார் மாணிக்கம்