அன்புள்ள ஜெ
மைத்ரி நாவல் வாங்கி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. முதலில் ஓர் அத்தியாயம் வாசித்தபின்னர் தொடர்ச்சியாக வாசிக்க முடியாமல் போய்விட்டது. அண்மையில் இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு பயணம் மேற்கொண்டேன். அதன்பிறகு திரும்பி வந்து தற்செயலாக கையில் சிக்கிய மைத்ரி நாவலை வாசித்தேன். அபாரமான ஒரு அனுபவத்தை அளித்தது அந்நாவல்.
ஓர் இடத்தை நாவலில் கதையின் பின்னணியாக வைப்பதும் சரி, அதற்கு ஏராளமான தகவல்களை அளிப்பதும் சரி, இலக்கியத்தில் சாதாரணமான விஷயங்கள். அந்த இடத்தின் மீது ஒரு கனவை உருவாக்குவதை மிகச்சில எழுத்துக்களிலேயே காணமுடிகிறது. மைத்ரி அப்படி ஒரு கனவை உருவாக்கியது. அந்த நிலத்தின் அழகே அங்கே விரியும் மென்மையான வெளிச்சம்தான். நான் வேறெங்கும் பார்த்ததில்லை. அந்த வெளிச்சம் எப்படியெல்லாம் இந்நாவலிலே சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையின் கனவுமிகுந்த ஒரு காலகட்டத்தையும், அந்தக் கனவிலேயே மூழ்கி மறைவதையும் நாவல் சொல்கிறது. வாழ்க்கையின் யதார்த்தம் வேறாக இருக்கலாம். ஆனால் இலக்கியம் கனவைத்தான் முக்கியமானதாக நினைக்கும். நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்
சிவக்குமார். ரா
மருபூமி வாங்க
மருபூமி மின்னூல் வாங்க
Dear Ajithan
Recently I was reading a book titled, “A Swim in a Pond in the Rain’, by the American writer George Saunders. He guides the reader through seven classic Russian short stories he’s been teaching for twenty years as a professor in Syracuse University. In the first chapter he analyses Chekhov’s short story, ‘In the Cart’, this story is about , the deep loneliness felt by the protagonist Marya Vasilyevna, a school teacher living a very ordinary and uninteresting life. By the end of the story you feel disappointed because Chekhov provides no solution, the protagonist is as lonely as she was in the beginning of the story. George Saunders’ writes, “ Does the story solve the problem of loneliness? Suggest a solution? No. It seems to say that such loneliness has always been with us and always will be. As long as there’s love, there will be people who aren’t loved….The story’s conclusion, essentially is : Yes, that’s how it is in the world.”
Reading your stories I felt like reading the greats like Chekov and Nabokov. I pray that you will produce more brilliant stories, and I thank you from heart for giving me an opportunity to taste and cherish your talent. God bless you, dear friend.
Sincerely
Prem
மருபூமி – வாசு முருகவேல்