அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கனடா வந்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், அவரது துணைவியார் உஷா அவர்களை சந்திக்க, பழனி ஜோதி , மகேஸ்வரி, சஹா, ராதா, வெங்கட், நான் என ஒரு கூட்டமாக ஜூலை 12, செல்லவிருக்கிறோம்.
காலம் செல்வம் அவர்கள் , யுவனை வாசகர்கள் சந்தித்து உரையாட, நிகழ்வு ஒன்றை ஜுலை, 14, மாலை மூன்று மணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அறிவியலாளர் வெங்கட்ரமணன் இலக்கிய ஆர்வலரும் கூட என அவரை அறிந்த நண்பர்கள் அறிவோம். அவர் நிகழ்வை ஒருங்கமைக்கிறார். கவிஞர் சேரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, நானும் பழனியும் வாசகர்களுக்கு யுவனின் படைப்புகளை சிறு அறிமுகம் செய்யவிருக்கிறோம். யுவனுடன் உரையாட, மகேந்திர ராஜனும், ஆனந்தும் கனடாவின் மேற்குக் கடற்கரை நகரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்ததுபோல ,இப்பொழுது கிழக்குக்கரை மக்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு. நண்பர்களை வந்திருந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
இந்த நிகழ்வில் யுவனின் புத்தகங்கள் கிடைக்கும் வண்ணம் காலம் செல்வம் சிறப்பு ஏற்பாடு ஒன்றும் செய்துள்ளார். புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பதில் செல்வம் எடுக்கும் எண்ணற்ற முயற்சிகளை பாராட்ட இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்,
சௌந்தர்.