இன்று கோவை கட்டண உரை

கோவையில் இன்று கட்டண உரை ஆற்றுகிறேன். ஓர் உரையை முழுமையாக உளம் அளித்து கேட்கச் சித்தமானவர்களுக்கு மட்டுமேயான உரை. பேருரைகளின் இயல்பு கொண்டது அல்ல, நான் அத்தகைய பெரும் பொதுப்பேச்சாளன் அல்ல. இது என்னுடன் அமர்ந்து சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு, நான் செல்லும் வழியில் உடன் வருவதற்கான ஒரு கூடுகை.

கோவை நன்னெறிக் கழகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்வு கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி அரங்கில் காலை 10 மணிக்கு நிகழ்கிறது. மதியம் 1230க்கு முடியும். மதிய உணவு அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ரூ 500

அரங்கு ஏற்கனவே நிறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரமுடியாதவர்கள் சிலர் இருக்க வாய்ப்புண்டு, அவ்வாறு எஞ்சும் இடம் அரங்கில் நேரில் வருபவர்களுக்கு அளிக்கப்படும்.

தலைப்பு: ஒன்றெனவும் பலவெனவும். (இந்திய மெய்யியல்)

 

முந்தைய கட்டுரைலீ நடை
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி – தூரன் விழா 2024: அழைப்பிதழ்