ஆக்ரமிப்புமரம், கடிதம்

அயல் ஆக்ரமிப்பு மரம் – லோகமாதேவி

ஆசிரியருக்கு,

இந்தக் கடிதம்  முழுமையாகத் தெரிந்து கொள்ள.

கோனோகார்பஸ் நிறைய இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.ஊடகங்கள் வழி அறிய முடிகிறது.

ஆனால் sena siamea,சீமைக்கொன்றை,இலை

உணவாகவும்,வேறு சில மருத்துவப் பயன்கள் கூறுகிறது. ஊடு மரமாக வளர்க்க பரிந்துரைக்கப்படுக்கிறது.

இது சென்னை நகர் உள்ளே சாலையோரம் அதிகம் உள்ளது.

https://tropical.theferns.info/viewtropical.php?id=Senna+siamea

மகேஸ்வரி.

அன்புள்ள மகேஸ்வரி

சீமைக்கொன்றை திருவனந்தபுரத்தில் நிழல்மரமாக கார்த்திகைத் திருநாள் மகாராஜாவால் கொண்டுவரப்பட்டது என்று அறிந்திருக்கிறேன். அன்றெல்லாம் ஒரு மரம் அல்லது செடி வருவது நல்லவிஷயமாகவே கருதப்பட்டது. அது ஆக்ரமிப்புத் தாவரம் என்னும் கருத்து இருக்கவில்லை. தாவரங்களின் சமநிலை பற்றிய எண்ணமும் இருக்கவில்லை.

இன்று நான் காணும் காடுகள் முழுக்க மூடுதிரைபோல ஒரு கொடி எழுந்து மரங்களை மூடி அழிக்கிறது. அது காடுகளுக்குள் சென்றுவிட்டது , இனி ஒன்றும் செய்ய முடியாது. இயற்கை அதுவே சமநிலை கண்டடைந்தால்தான் உண்டு.

இன்று நம் காடுகளிலுள்ள பெரும்பாலான செடிகள் ஆக்ரமிப்புத்தாவரங்களே. பார்த்தீனியம். பூச்செடி என பழங்குடிகளே பெயரில்லாமல் சொல்லும் நுணுக்கமான கொத்துப்பூக்கள் கொண்ட ஒருவகை முட்செடி. இவை காடுகளை மூடி இங்கிருந்த தாவரங்களை அழித்துவிட்டிருக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைகோவை காந்தி நினைவகம், கடிதம்
அடுத்த கட்டுரைவீரகத்தியார் காசிநாதர்