அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். நலம்தானே?
சமீபத்தில் தங்கள் தளத்தில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து வெளிவந்த செபாஸ்டின் கவிதைகளை மிகவும் விரும்பிப் படித்துவந்தேன். தன்னிச்சையாக எழுந்து பறக்கிற இலவம்பஞ்சுபோல அவருடைய ஒவ்வொரு கவிதையும் மிகவும் இயல்பாக உருவாகி வானத்தை நோக்கி எழுகிறது. காற்றின் போக்கில் விருப்பம்போல அலைந்துவிட்டு மெல்ல மெல்ல மண்ணை அடைகிறது. குழந்தைமைக்கே உரிய கற்பனை என்றாலும் ஒவ்வொரு சித்திரமும் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
எல்லாக் கவிதைகளுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வேளாண்மை கவிதையைப் படித்துப் படித்து கிட்டத்தட்ட எனக்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டது. நான் சந்திக்கும் நண்பர்களிடமெல்லாம் அதைப்பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அதைப்போலவே முதல் கனி , நீர்வண்ணம், துடிக்காதது கவிதைகளையும் சொல்ல வேண்டும். என் கைகளை இங்கிருந்தே அவர் இருக்கும் திசைநோக்கி நீட்டி, அவர் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன். கல்பற்றா நாராயணன், வீரான் குட்டி வரிசையில் செபாஸ்டினுக்கும் ஒரு தனித்தொகுதி வந்தால் நன்றாக இருக்கும். அது விரைவில் நிகழும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்.
அன்புடன்
பாவண்ணன்
அன்புள்ள பாவண்ணன்,
நலம்தானே?
செபாஸ்டியன் மலையாளத்தில் மிகுந்த தனித்தன்மை கொண்ட படைப்பாளி. அவருடைய கவிதைகளை நூலாகக் கொண்டுவரும் நோக்கம் உண்டு. அதற்கு முன்பு பி.ராமன் கவிதைகளையும் நூலாக்கலாமென எண்ணுகிறேன்
ஜெ
செபாஸ்டியன் கவிதைகள்-2
செபாஸ்டியன் கவிதைகள் 1
செபாஸ்டியன் கவிதைகள்-3
செபாஸ்டியன் கவிதைகள் 4
அன்புள்ள ஜெயமோகன்