JMO,
Happen to watch this only now. Amazing. You are the Master.
Thanks for everything.
Mani.
அன்புள்ள மணி
நன்றி.
உங்களுக்கு இப்போதிருக்கும் தலைபறக்கும் அவசரத்தில் நீங்கள் இதைக் கேட்பீர்கள் என நினைக்கவில்லை.
இந்தவகை உரைகளுக்கு ஒரு தனித்தன்மை உள்ளது. என் முன் அமர்ந்திருக்கும் அரங்கும் என்னுடன் உணர்வு ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் உடன் வருமென்றால் அங்கே எனக்கே புதிய ஆற்றல் பிறக்கிறது. நான் அதுவரை எண்ணாத சிந்தனைகள் நிகழ்கின்றன. அப்படி ஒரு ஒத்திசைவு நிகழவேண்டுமென்றால் அந்த உரையை மதித்து, அதற்கென்றே வருபவர்கள் வேண்டும். ஆகவே கட்டண உரை.
அந்த தற்செயலான மேலெழல் எனக்குப் பெரும் ஈர்ப்பை அளிக்கிறது. ஆகவே எப்போதுமே உரைகளை விரும்புகிறேன். ஆனால் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து அவ்வாறு உரை மேலெழாமல் ஆகிவிட்டதென்றால் என்னாகும், கட்டணம் வேறு வாங்கிவிட்டோமே என்னும் பதற்றம் உரைகளை தவிர்க்கவும் செய்யும். ஆகவே இருநிலையில் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறேன். சாமானியமாக ஒப்புக்கொள்வதில்லை. நிகழ்ந்தபின் நிறைவாக உணர்கிறேன்.
அடுத்த கட்டண உரை நாளை (ஜூன் 30 அன்று) கோவையில். அந்தப் பதற்றத்தில் உங்கள் கடிதம் மகிழ்வைவிட ஆறுதலை அளிக்கிறது.
ஜெ