ஜெர்மானிய தத்துவ அறிமுகம்

ஜெர்மானிய தத்துவ அறிமுகம்

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் ஜெர்மனியில் உருவான தத்துவ மறுமலர்ச்சி தத்துவம் என்பதன் வரையறையையே மாற்றியமைத்தது. மதத்தைச் சாராமல் தத்துவம் தனக்குரிய அறிதல்முறையுடன், தர்க்கமுறையுடன் வாழ்வின் அடிப்படைகளைப் பேச ஆரம்பித்தது. அது நவீன உலகம் உருவான காலகட்டமும் கூட. நவீனக் கல்வி, நவீன ஊடகம் ஆகியவை உருவாயின. காலனியாதிக்கம் வழியாக ஐரோப்பிய சிந்தனை உலகமெங்கும் சென்றது. விளைவாக ஜெர்மானிய தத்துவ மரபு உலக சிந்தனையையே வடிவமைக்கும் சக்தியாக ஆகியது.

ஜெர்மானிய தத்துவ சிந்தனையை முறையாக அறிமுகம் செய்துகொள்வதென்பது ஐரோப்பாவின் நவீன தத்துவசிந்தனையின் அடித்தளத்தை அறிவதாகும். அதன்மீதுதான் நவீன அறவியல், நவீன ஜனநாயகசிந்தனைகள், நவீன அரசியல் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. இன்றைய நமது சிந்தனைகள் அனைத்துமே அவற்றிலிருந்து கிளைத்தவையே.

ஜெர்மானிய தத்துவத்தை மூன்றுநாட்களிலாக அறிமுகம் செய்யும் வகுப்பு இது.

நடத்துபவர் அஜிதன்.  தத்துவத்தில் முதுகலை படிப்பை முடித்த அஜிதன் ஜெர்மானிய தத்துவத்தில் சிறப்பு ஈடுபாடு கொண்டவர். திரைப்படம், மேலையிசை ஆகியவற்றில் பயிற்சி கொண்டவர். திரைப்படத்துறை சார்ந்து செயல்படுகிறார். மைத்ரி, அல்கிஸா ஆகிய நாவல்களையும் மருபூமி என்னும் சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு

[email protected]

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்: இடமிருப்பவை

 

வைணவ இலக்கிய அறிமுக முகாம்

நாலாயிரத் திவ்யபிரபந்தமே வைணவ தத்துவம் தோன்றிய விளைநிலம். அதை அறிவார்ந்து அணுகுவதும், அதன் தமிழ்ச்சுவையை அறிவதும் இன்றைய தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கு மிக இன்றியமையாதது. அறியாதவர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிட முடியும். இதற்கு முன் நான்கு வகுப்புகள் வைணவ இலக்கிய அறிமுக முகாம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொன்றும் மிகப்பெரிய அறிதலாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றே கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

இஸ்லாமிய மெய்யியல் – இலக்கிய அறிமுகம்

இந்தியப் பண்பாட்டின் ஓர் அம்சமாக இஸ்லாம் பலநூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் இஸ்லாம் குறித்த புரிதல் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமில்லை. அப்புரிதல் இல்லாமல் இந்திய வாழ்வில் ஒருமைப்பாடு அமையாது. நமக்குத்தேவை ‘சகிப்புத்தன்மை’ அல்ல ‘புரிதல்’.

இஸ்லாமின் மெய்யியல்களில் ஒன்றான சூஃபி மரபு இந்திய ஆன்மிகச் சிந்தனையில், இந்திய கலைகளில் (குறிப்பாக இசையில்) மிகப்பெரிய பங்களிப்பாற்றிய ஒன்று. அதை உணராமல் இந்திய இலக்கியத்தையும் கலையையும் முழுதறிய இயலாது.

இஸ்லாமிய அரசியல்வாதிகளிடமிருந்து எவரும் அப்புரிதலை அடையமுடியாது, அவர்கள் பிரிவினையையே முன்வைப்பார்கள். இஸ்லாமிய மெய்யியலை அறிந்தவர்களிடமிருந்தே அப்புரிதலை அடையமுடியும். இன்று வெறுப்பும் பிரிவினைநோக்கும் ஓங்கியுள்ள சூழலில் ஆழ்ந்து அறிதலே இச்சூழலுக்கு எதிரான மெய்யான எதிர்வினையாக அமையும்.

இஸ்லாமியர்கூட இன்று இஸ்லாமை இரண்டு வகையிலேயே அறியமுடியும். மதம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும். மெய்யியல் சார்ந்து அறிய அதற்கு மட்டுமே உரிய வகுப்புகள் மிக அரிது.

தமிழ்ப்பண்பாட்டின் முக்கியமான ஒரு கூறு தமிழ் இஸ்லாம். தமிழின் காவியமரபு, தமிழின் சிற்றிலக்கிய மரபு இரண்டிலும் பெரும்பங்களிப்பு கொண்டது. அதை தமிழிலக்கிய வாசகர், தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலர் அறிந்திருக்கவேண்டும்.

கவிஞர், இஸ்லாமிய ஆய்வாளர் நிஷா மன்ஸூர் நடத்தும் இவ்வகுப்பில் இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன் மெய்யியல், அதன் உலகளாவிய சூஃபி மரபு, தமிழ் சூஃபி இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

தொடர்புக்கு [email protected]

 

ஆலயப்பயிற்சி, இரண்டாம் நிலை

இது வரை நிகழ்ந்த ஆலயப்பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டவர்களுக்கான அடுத்த நிலை பயிற்சி இது. இதில் ஓர் ஆலயத்தில் மேற்கொண்டு கற்கவேண்டியவை, கவனிக்கவேண்டியவை எவை என ஆசிரியர் பயிற்றுவிப்பார்.

அத்துடன் இக்கல்வியை எப்படி நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக்குவது என்றும் கற்பிப்பார். ஓர் ஆலயத்தை எடுத்துக்கொண்டு முழுமையாக அதை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி எப்படி ஒரு சிறு நூலாக எழுதுவது என்பது ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்பிக்கப்படும்.

சிறு குழுவாக ஆகி இதை செய்வது செய்பவர்களுக்கும் ஆழ்ந்த கவனத்தையும், ஆலயக்கலை சார்ந்த பயிற்சியையும் அளிக்கும். நம் ஆலயங்ளைப் பதிவுசெய்யும்  பெரும்பணியையும் தொடங்கியவர்கள் ஆவோம்

நாள் ஆகஸ்ட் 16 17 மற்றும் 18 (வெள்ளி, சனி, ஞாயிறு)

[email protected]

—————————————————————————-

இடங்கள் நிறைந்தவை

 

பௌத்த மெய்யியல்- தியானம். நாள் ஜூலை 5,6  மற்றும் 7  தேதிகளில் நிகழ்கிறது (வெள்ளி, சனி ,ஞாயிறு)( இடங்கள் நிறைவுற்றன)

ஜெயமோகன்

அபுனைவு வாசிப்புப் பயிற்சி ஜூலை 19 மற்றும் 20 தேதிகள். (வெள்ளி, சனி)(இடங்கள் நிறைவுற்றன)

தத்துவம் முதல் வகுப்புஆகஸ்ட் 2,3 மற்றும் 4 (வெள்ளி, சனி, ஞாயிறு) அன்று அறிவிக்கப்பட்டிருந்த தத்துவம் முதல் வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன.

அடிப்படை யோகப்பயிற்சி

நாள் ஜூலை 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)

(இடங்கள் நிறைவுற்றன)

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

மேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன் . நான்காவது வகுப்பு.

நாள் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1

வி.அமலன் ஸ்டேன்லி நடத்தும் பௌத்த மெய்யியல்- விபாசனா அமர்வுகள் மீண்டும் நிகழ்கின்றன.

நாள் செப்டெம்பர் 6,7 மற்றும் 8 (வெள்ளி, சனி, ஞாயிறு)

இந்திய தத்துவம் முதல் வகுப்பு

இந்திய தத்துவ இயல் முதல் நிலை வகுப்பு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பில் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் முதல்நிலை வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

செப்டெம்பர் 13,14 மற்றும் 15 (வெள்ளி சனி ஞாயிறு)

தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி

மரபின் மைந்தன் முத்தையா மரபிலக்கியத்தில் முறையான பயிற்சியும் நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். அவர் நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்  நிகழும். சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரையிலான தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியும் அவற்றை வாசிக்கும் முறையும் கற்பிக்கப்படும். இது  இலக்கணப்பயிற்சி அல்லது தகவல்பயிற்சி அல்ல. முழுக்க முழுக்க இலக்கிய ரசனைப் பயிற்சி மட்டுமே

செப்டெம்பர் மாதம் 20 22 மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைஇரு பெருநிலைகள் உரை
அடுத்த கட்டுரைTwenty Fingers