சரத்சந்திர எதிரிவீர- கடிதம்

அன்புள்ள ஜெ

ஈழம் பற்றி எழுதியிருந்தீர்கள். ஈழத்தில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே கலாச்சார உரையாடல் போதிய அளவில் நிகழவில்லை என்பது உண்மையே. ஒரு போர்ச்சூழலில் அவ்வாறு நிகழமுடியாது. அதற்கு சிறிய அளவில் முயன்றவர்கள் எல்லாம் இரு தரப்பிலுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதே வரலாறு. ஆனால் பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. இந்த விவாதத்தை ஒட்டி பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சி.மௌனகுரு எழுதிய இந்த நூல் முக்கியமானது, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்‘. இணையத்தில் கிடைக்கிறது

ரவிகிருஷ்ணா

அன்புள்ள ரவிகிருஷ்ணா

நன்றி.

சி.மௌனகுரு என் மதிப்புக்குரிய நண்பர். அவர் எழுதிய அனேகமாக எல்லா நூல்களையும் வாசித்திருக்கிறேன். இந்நூல் கவனத்திற்கு வரவில்லை. நன்றி

ஜெ

சி.மௌனகுரு தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைMorals in Democracy
அடுத்த கட்டுரைவே.நி.சூர்யா, விருது – கடிதம்