ஒரு மருத்துவ சேவை

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

ஓர் உன்னதமான மருத்துவ சேவையை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டே இக்கடிதம். கடந்த ஏழெட்டு மாதங்களாகவே கடுமையான மூச்சுத்திணறல்தூக்கமின்மைஉடல்சோர்வு உள்ளிட்ட பிணிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். வெவ்வேறு இடங்களில் உள்ள சிகிச்சை மையங்களுக்குச் சென்று வைத்தியம் பார்த்தாலும் உடலளவிலும் மனதளவிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமலிருந்தது. உடலும் மனதும் ஒன்றையொன்று மாறிமாறி கைவிட்டபடியே இருந்தன. ஏதாவதொரு நற்சிகிச்சை நிகழ்ந்து கொஞ்சம் தேறிவிடமாட்டோமா என தவித்தேன்.

அத்தகைய சூழ்நிலையில் சத்யா அக்காவைச் சந்தித்தேன். பூமிதான இயக்கத்திலும்ஏழைகளுக்கு நிலம் பெற்றுத்தரும் போராட்டங்களிலும் பங்கேற்று இந்திய தேசம் முழுக்க நடந்தலைந்து இன்றுவரை வைராக்கியத்தோடு சேவையாற்றும் மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் மகள்தான் சத்யா அக்கா. அவர் ஒரு மருத்துவர் என்பதால் என் உடல்நிலைச் சூழலை முழுதாகக் கேட்டறிந்து எனக்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். அதற்கான கட்டணத்தையும் அவரே ஏற்றுக்கொண்டார். அந்த உதவியைப் பெறுவதற்கு பெரிதும் தயக்கப்பட்டேன். ஆனால்அந்த சிகிச்சை மையத்திற்கு சென்றபிறகுதான் அது எத்தகையதொரு நல்வாய்ப்பு என்பதையறிந்தேன்.

அந்த மருத்துவமனையின் பெயர் ஆரோக்யதாமா. பெங்களூர் நகரத்தின் ஆனேகல் பகுதியில் இம்மையம் அமைந்துள்ளது. பொதுவாகவே மருத்துவமனை என்றாலே எனக்குள் ஒருவித அச்சம் இயல்பாகவே எழும். ஆனால்இந்த மருத்துவமனை அமைந்திருந்த சூழ்நிலை அந்த எண்ணத்தை இல்லாமலாக்கியது. அவர்களுடைய அணுகுமுறையும் பணிவும்அவர்களின் முகத்தில் இடைவிடாது தவழும் சிரிப்பும் நம்முடைய தயக்கங்கள் எல்லாவற்றையும் உடைத்து ஒருவித நிம்மதி நிலைக்குள் நம்மை அமர்த்துகிறது. அந்த மையத்தில் நிகழும் சிறுசிறு செயலசைவுகள்கூட நான் இதற்குமுன்பு எங்கும் கண்டிராதது.

காலையில் நமக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மதியம் நமக்கு உணவு பரிமாறுகிறார்கள்மருத்துவப் பல்கலைக்கழகமும் இணைந்த மருத்துவமனை வளாகமென்பதால் நிறைய இளைய மருத்துவர்களையும் அங்கு சந்தித்தேன். ஒருவார காலம் சிகிச்சைக்காக நான் அங்கு தங்கியிருந்தேன். அங்கிருக்கும் நிறைய மனிதர்களுடன் மனம்விட்டு உரையாடினேன். உண்மையில்ஓர் கனவுக்கான முற்றளிப்பு நிகழ்கையில் அது எத்தகைய ஆற்றல்மிகு செயலாக பரிணமித்தெழும் என்பதற்கான கண்கூடான சாட்சி அந்த மருத்துவமனை.

ஆயுர்வேதம்உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் நோய்நீக்கும் நேச்சுரோபதிசித்த வைத்தியம்யோகாஇயன்முறை மருத்துவம்அக்குபஞ்சர் உட்பட அனைத்து வகையான சிகிச்சை முறைகளும் அங்குள்ளன. ஆரோக்யதாமா அளிக்கும் சிகிச்சையோடு ஒப்பிட்டால் அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளும் கட்டணம் குறைவு எனத் தோன்றுகிறது. ஒருவார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெறுவதற்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகிறது. நல்ல தனியறைசிறப்பான உணவு என மனதுக்கு நிறைவளிக்கும்படி அவர்களது சிகிச்சை நிகழ்கிறது. என்னுடைய தனியனுபவ அடிப்படையில் சொல்லப்போனால் மிகுந்த அகநம்பிக்கை தரக்கூடிய ஒரு சிகிச்சையையும் நிதானத்தையும் நான் அங்கு அடைந்தேன். தகுந்த சிகிச்சை முறைகளினால் குறிப்பிடத்தக்க நேர்மறை விளைவுகளுடன் நான் என் பிணிகளிலிருந்து மீண்டுவருகிறேன்.

லட்சுமி பாட்டி என்னும் முதிய தாய்தான் முதன்முதலில் அவ்விடத்திற்கு வந்து ஒரு சிறிய குடிலமைத்து தியானம் செய்து இந்த வைத்தியசாலையைத் துவங்கியிருக்கிறார். அதன்பின்அவருடைய அண்ணன் மகன் மருத்துவர் H.R.நாகேந்திரா என்பவர் நிலம் வாங்கி லட்சுமி பாட்டியின் அகவிருப்பத்தின்படி அதிலொரு மருத்துவமனையை எழுப்பினார். அவரைத்தான் அந்த மருத்துவமனையிலுள்ள எல்லோரும் குருஜி என அழைக்கிறார்கள். இன்று நாம் காணும் அம்மருத்துவமனையை நிறுவியது அவர்தான். உண்மையிலேயே அவர் ஆற்றியுள்ளது அசாத்தியமான உழைப்பு

மருத்துவர் H.R.நாகேந்திரா அவர்களின் அர்ப்பணிப்பும் பெரும்பணியும் இன்று இந்திய அளவில் மிகச்சிறந்த உதாரணமாக ஆரோக்யதாமாவை மாற்றியுள்ளது. 2014ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘ஜூன் 21′ ம் தேதியை ‘உலக யோகா தினமாக‘ ஐக்கிய நாடுகள் சபையில் அறிவித்தார். உலக யோகா தினத்தை கடைபிடிக்க வேண்டுமென பிரதமருக்கு முன்மொழிந்தவர்களுள் ஒருவராக மருத்துவர் H.R.நாகேந்திரா அறியப்படுகிறார். SVYASA பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஆவார்.

யோகா துறையில் இவருடைய உயரிய சேவைகளுக்காக 2016ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. 1973ல் முதன்முதலில் இவர்கள் ஒரு தியான மையமாகத் தங்களின் சமூகப் பங்களிப்பைத் துவங்கினார்கள். அதன்பின் லட்சுமி பாட்டியின் முயற்சியால் சிறிய குடிலாகத் துவங்கப்பட்ட ஒரு மருத்துவக்கனவு இன்று S-Vyasa எனும் கல்விப் பல்கலைக்கழகமாக பெங்களூரில் உருவெடுத்து விரிந்து நிற்கிறது

படிப்படியான வளர்ச்சியினால், 2016ம் ஆண்டில் ஆயிரத்து ஐநூறு படுக்கைகள் கொண்ட ‘லட்சுமி பாட்டி மருத்துவமனைக்கான அடிக்கல் இந்தியப் பிரதமரின் கரங்களால் நாட்டப்பட்டுள்ளது. இந்திய மருத்துவமுறையின் பல்வேறு சாத்தியங்களை உலகறியச் செய்ததில் ஆரோக்யதாமா மருத்துவக்கூடத்துக்குப் பெரும்பங்குண்டு. ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த இவர்கள் உருவாக்கிய சிகிச்சையை 1985ல் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் எனும் அமைப்பு மேம்பட்ட சிகிச்சையாக ஒப்புக்கொண்டது. இதுவரையில் 450க்கும் அதிகமான மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா தழுவிய ஒரு இயக்கத்தைக் கட்டமைத்து பல்லாயிரம் மருத்துவமுகாம்கள் வழியாக பல லட்சம் மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பங்களிப்பை தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்கள்.

ஆகவேஇந்த மருத்துவமனையைப் பற்றி அறிந்திடாத நண்பர்களுக்கு அதைப்பற்றிய சிற்றறிமுகத்தை உண்டாக்குவது அவசியம் என மனதுக்குத் தோன்றியது. பிணிகளால் உடற்சலனம் கொண்டிருக்கும் தோழமைகள் அவசியம் இந்த மருத்துவமனையின் சிகிச்சையை முயன்றுபார்க்கப் பரிந்துரைக்கிறேன். குறைவான கட்டணத்தில் பிணிகளை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ சேவையை ஆரோக்யதாமா அளிப்பதாக உணர்கிறேன். முதியவர்கள்பெரியவர்கள்குழந்தைகள் என எல்லோருக்குமான குணப்பாடு நிகழ இந்த சிகிச்சைக்கூடமும் அதில் பணியாற்றும் மனிதர்களும் விருப்பத்தோடு உழைக்கிறார்கள். காலமாற்றத்தில் நமக்கு நேர்கிற உடலுபாதைகள் மற்றும் தீராப் பிணிகளுக்கு இத்தகைய சிகிச்சை மையங்கள் இயங்குவதும் அதன் சேவைநிழல் பரவுவதும் மிகுந்த இன்றியமையாதது.

சிகிச்சைமைய இணையதள முகவரி:  https://arogyadhama.com/

முழுமுகவரி: Prashanti Kutiram Vivekananda Road, Kalluballu Post, Jigani, Anekal, Bengaluru – 560105

 தொடர்பு எண்கள் : 8022639963, 9880598017, 9972871777

நன்றிகளுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைIs Hinduism a savage religion?
அடுத்த கட்டுரைஜோகன்னா மீட்