ஆலமும் படுகளமும்- கிருஷ்ணன் சங்கரன்

படுகளம் வாங்க

அன்புள்ள ஜெ.,

ஆலம், படுகளம் இரண்டும் ஒரே களத்தில் அமைந்தவை. ரணகளமான கொலைக்களம். இந்தக் கதைகளைப் படித்தவுடன் உடனே தோன்றியது இந்தக்கதைகளை வேறு யாரும் கூட எழுதியிருக்கக்கூடும். ஆனாலும் கூட நீங்கள் மட்டும் எழுத்தக்கூடிய சில பகுதிகளாவது இரண்டு கதையிலும் இருந்தன. ஆலத்தில் தலைமுறை தலைமுறையாக ஊறிவரும் வன்முறை மற்றும் அதன் பரிணாமவளர்ச்சி. படுகளத்தில் திரவமாக ஊறித் ததும்பும் வன்முறையினூடாக கதைசொல்லியின் பரிணாம வளர்ச்சியதார்த்தத்தில் அநேகமாக கதைசொல்லி காசிலிங்கம் காலில் விழுவதோடு கதை முடிந்துவிடும். “செத்தா சாகு, கொலைதான..பண்ணுஎன்கிற அம்மா உங்களுடைய யதார்த்தம்.

யதார்த்தம் அல்லது யதார்த்தமின்மை என்பது very subjective. கதைசொல்லி அளவுக்கே வணிகத்தில் தொடர் வெற்றிகளைக் கண்ட ஒருவருக்கு இது யதார்த்த நாவல்தான். இப்படிப் பொழுதுபோக்கு நாவல்களையும் இலக்கியம் கலந்தும் எழுதமுடியும் என்று காட்டியிருக்கிறீர்கள். முதல் அத்தியாயத்தில் வரும் அந்த நண்பகலின் வேவ்வேறு பரிமாணங்கள், அந்த onset of afternoon அப்படி ஒரு இலக்கியச்சுவை கொண்டிருந்தது.

அப்புறம் இது ஒரு ode to Balumahendra. மேலும் கதைசொல்லியின் கல்யாணத்திற்கு வந்த வெற்றிமாறனிடம் கதையைச் சொல்லியிருந்தால் படமாகவும் வரலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இரண்டு நாவலிலுமே முக்கிய பாத்திரமாக வரும் வக்கீல்கள் பிராமணர்கள். “நீரு ஐயரு, உம்மை வெட்டமாட்டானுகஎன்ற வசனம் இரண்டு நாவலிலுமே வருகிறதுஎழுபது வருடங்களுக்கு முன் தன் கட்சிக்காரனுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்கமுடியாமல் உறுப்பறுபட்டு இறந்த என் மூதாதையை எண்ணிக்கொள்கிறேன். “டே..வாங்கின காசெல்லாம் குடுத்துர்றேண்டான்னு  கெஞ்சியிருக்கார். காப்பாத்தத் துப்புல்ல, உனக்கெல்லாம் எதுக்குடா.. ன்னுமேல் ஆர்கனை அறுத்துயெறிஞ்சுட்டாபீஸ் பீஸா சீவியெறிஞ்சுட்டாமொக்கைமாமா ஜமுக்காளத்தை எடுத்துண்டுபோய் அத்தானை அள்ளிண்டு வந்தாஎன்று சொல்லும்போது குரல் உடைந்து அழுதுவிட்டார் என் அப்பா

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைவெண்முரசு முழுப்பதிப்பு, கேள்விகள்
அடுத்த கட்டுரைபூந்தளிர்