படுகளம், கடிதம்

படுகளம் வாங்க

அன்புள்ள ஜெ … 

படுகளம் நாவல் குறித்து எனது வாசிப்பனுபவம்

படுகளம் : தன் கண்ணீர் வழிந்த முகத்தை ரத்தத்தால் கழுவும் இளைஞனின் கதை .    

ஒரு நல்ல குடும்பத்தலைவரின் தொழிலுக்கு கெட்டவர்கள் கேடு செய்கிறார்கள்பாதிக்கப்பட்ட அவர் விஷம் குடித்து தற்கொலை செய்கிறார். மனைவி, மகன், மகள்களை கொண்ட அந்த குடும்பம்வாழ்ந்து கெட்ட குடும்பமாகிறதுஅதில் தலையெடுத்த மகனின் தொழிலுக்கும் கேடு நேர்கிறது. அவன் கண்ணீர் விடுகிறான். தான் வாழ பிறரை அழிக்கும் படுகளம் இது. அவன் தன் குடும்பத்தையும், தொழிலையும்  காப்பாற்ற வியூகம் அமைத்து கேடு செய்தவர்களை கொன்றழிக்கிறான்

இதில் வரும் மகன் நல்லவன், படித்தவன், சூதும் வாதும் தெரிந்தவன். அதை செய்யாதவன். ஆனால், கெட்டவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சூதும் வாதும் செய்கிறான். படித்தவன் சூதும், வாதும் செய்தால், எப்பேர்ப்பட்ட கெட்டவனின் வாழ்க்கையும் அழியும். கோடீஸ்வரனின் சாம்ராஜ்யமும்அய்யோன்னு போகும்

இது தான் எழுத்தாளர் ஜெயமோகனின்  ‘படுகளம்நாவலில் நடக்கிறது. ஜெயமோகன் இந்த நாவலை தனது இணையதள பக்கத்தில்jeyamohan.in ) தினசரி ஒரு தொடராக 20 அத்தியாயம்  எழுதியிருக்கிறார். 2024 மே முதல் தேதி துவங்கி இன்று 20ம் தேதி முடித்திருக்கிறார். தினசரி நள்ளிரவு 12 மணிக்கு பதிவேற்றமாகும் இந்த தொடரை நான் அதிகாலையில் கண்விழித்தவுடன் படித்துவிடுவேன்

இதேபோல், தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன் தொடர்களை என் பள்ளி, கல்லூரி காலங்களில் பத்திரிக்கைகளில் தொடராக படித்திருக்கிறேன்என்னைப்போல் முந்தைய தலைமுறை வாசகனுக்கும், என் மகனைப்போல் இளம் தலைமுறை வாசகனுக்கும் சுவராஸ்யம் கொடுக்கக்கூடிய நாவல் ஜெயமோகனின்படுகளம்’. 

.டி.,யில் பணிபுரியும் என் மகனை தொடர்பு கொண்டு கூறினேன்

நாம் சில படங்களை பார்த்துமேக்கிங்நன்றாக இருக்கிறது, என்று சொல்வேமேஅப்படி இருக்கிறது இந்த தொடர்இதை நீ வாசிக்க ஆரம்பி, முதல் அத்தியாயத்தின் க்ளைமாக்ஸ் வரை பொறுமையாக படித்துவிட்டால், இந்த தொடரின் இறுதியில் ஒரு பிடிப்பு ஏற்படும்அதற்கப்புறம் ஓரிரு அத்தியாயங்கள் உன்னை உள்ளிழுத்துவிடும். பின்னர் நீ விலக முடியாது. உனக்கு நேரமிருந்தால் 20 அத்தியாயத்தையும் ஒரே நேரத்தில் முடித்துவிடுவாய்.

இந்த நாவலில் வரும் ஹீரோவுக்கு துணையாக, ஒரு இளம் வக்கீல் வருகிறார். இருவரும் சேர்ந்து கதையில் வரும் வில்லன்களின் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிறார்கள்ஒரே பர, பரஆக்ஷன் காட்சிகள் தெரியுமா ?.

இது சினிமாவிற்கு ஏற்ற கதை. ஆனால், எந்தவொரு எழுத்தாளர் எழுதிய கதையும் வாசகன் திருப்திபடும் வகையில் சினிமாவாக எடுக்க முடிவதில்லை. இந்த நாவலை சினிமாவாக எடுத்தால், நாவல் தந்த விவரணையை, மனசை தொட்ட உணர்வுகளை, வாழ்வின் நுட்பங்களை காட்சிப்படுத்த எந்த டைரக்டராலும் முடியாது

 ஆனால், சினிமாவை மிஞ்சும் காட்சி இன்பத்தை, திருப்தியை, எழுத்தில்  கொடுக்க முடியும் என்பதை இதை படிக்கும் போதுநீ உணர்வாய், என்று மகனுக்கு சொன்னேன்

அதற்கு அவன், ‘நான் என் வேலையில், தினசரி 8 மணி நேரம் லேப்டாப்பிலேயே இருக்கிறேன். வேலை தவிர வேறு எதற்கும் அதை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அதனால் லேப்டாப் அல்லது செல்லில் எதையும் வாசிப்பதில்லை. புத்தகமாக வரட்டும் படிக்கிறேன்என்றான். விரைவில் புத்தகமாக வந்துவிடும், என்றேன்

நன்றி! .

இப்படிக்கு

A. கருணாகரன்,

11.2.44, தெற்கு ரத வீதி,

சோழவந்தான்

மதுரை மாவட்டம்

முந்தைய கட்டுரைஅந்தக் களம்: கடிதம்
அடுத்த கட்டுரைஅறந்தை நாராயணன்