இரா. நடராசன்.ஆயிஷா நடராசன் தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், கல்வியாளர். தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். பல நூல்களை மொழிபெயர்த்தார். நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். பால சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.