மோ.கோ. கோவைமணி தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் ஓலைச்சுவடியியல் துறையில் இணைப்பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். கவிதை, ஆய்வு, சுவடியியல் எனப் பல்துறை நூல்களை எழுதினார், பதிப்பித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தார். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றார்
தமிழ் விக்கி மோ.கோ.கோவைமணி