தளிர்மேல் பாறை
ஜெ
இன்றைய தொழில்நுட்பத்தால் இயங்கும் சுருங்கிய உலகில் அவர்கள் உண்மையில் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா? இதைப் பற்றி அவர்களும் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள், மேலும் அவர்களின் நோக்கத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவு இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறதே.
இந்த சிறுபான்மை பயம் பார்சிகள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின்கள் போன்ற பிற உண்மையான சிறுபான்மையினரிடம் காணப்படவில்லையே? .
அப்படியானால், நாம் அனைவரும் (அவர்கள் உட்பட) அவர்கள் பெரும்பான்மை என்று நன்றாகவே அறிந்திருக்கிறோம் என்று பொதுவெளியல் எழுதுவதுதானே்முதல்படி?
வசதிக்காக ஒருவர் பெரும்பான்மை மதத்திற்கு மாறுவதை ஏன் கொண்டாட வேண்டும் என்பதுதானே நவீன சிந்தனையாளர்களுக்கு நாம் வைக்கும் முதல்கேள்வியாக இருக்க வேண்டும்?
Please correct me if I am wrong in my understanding.
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா,
இந்த வகையான அரசியல் விவாதங்களுக்குள் ஈடுபட இப்போது எனக்கு ஆர்வமில்லை. நான் இன்னொரு மனநிலையில் இருக்கிறேன்.
ஒரு சமூகம் தாங்கள் சிறுபான்மையினர் என்னும் உணர்வை அடைந்தாலே அது அவர்களிடம் அந்த மனநிலைகளை அடைகிறது என்பதே நான் சொல்லவந்தது.
ஒரு சமூகம் தங்களை உரிமையற்ற சிறுபான்மையினர் என எண்ணுவது சரியா இல்லையா என எப்படி அறிவது?
அவர்களுக்கு நிகழும் அதிகார அமைப்பில் விகிதப்படிப் பங்கு உள்ளதா இல்லையா என்பதைக் கொண்டுதான்.
இஸ்லாமியருக்கு இன்று அந்தப் பங்கு இந்திய அதிகாரத்தில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்
ஜெ