பிரகிருதி நம்மைச்சூழ்ந்துள்ள பிரபஞ்சப்பொருள். இயற்கை. தானாக இயல்வது. தானாகவே தன்னை பரப்பி நிலைநிறுத்திக் கொள்வது. சம்ஸ்கிருதத்தில் இச்சொல் இயற்கை என்னும் சாதாரண பொருளிலும், அனைத்துப் பொருட்களும் அடங்கிய பொருள்வயப் பிரபஞ்சம் என்னும் பொருளிலும், ஒன்றின் இயல்பு என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சாங்கிய தரிசனத்தில் இது முதலியற்கை என்றும், பிரபஞ்சத்தின் மூலப்பொருள் என்றும் குறிப்பிடப்படுகிறது.