வார இதழ்களில் கதைகள் எழுதுவது பெரும் கௌரவமாக இருந்த காலகட்டத்தில் பி.வி.ஆர் ஒரே சமயம் குமுதம், கல்கி, ஆனந்த விகடன், கலைமகள் ஆகிய இதழ்களில் தொடர்கதை எழுதினார் என்ற செய்தி அவ்வப்போது குறிப்பிடப்படுவது. ஐம்பதாண்டுகளுக்கு முன் வணிக எழுத்தின் நட்சத்திரங்களான நா.பார்த்தசாரதி, சாண்டில்யன் போன்றவர்களுக்குச் சமானமான இடத்தில் இருந்தார். ஆனால் அரசூழியர் ஆகையால் எங்கும் தன்னை முன்வைக்கவில்லை. அவர் ஓய்வுபெற்றபின்னரே அவருடைய முதல் புகைப்படம் வெளியாகியது.
தமிழ் விக்கி பி.வி.ஆர்