ஜே.வி.செல்லையாவின் பத்துப்பாட்டு மொழியாக்கம் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட தொடக்ககால சங்க இலக்கியப்படைப்புகளில் ஒன்று. 1946 டிசம்பரில் சுவாமி விபுலானந்தர் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது. கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவு இதற்கிருந்தது. The Ten Tamil Idylls என்னும் தலைப்பு பிழையான மொழியாக்கம் என கமில் சுவலபிள் போன்ற பிற்கால ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜே.வி.செல்லையா
