படுகளம், கடிதங்கள்

படுகளம் மின்னூல் வாங்க 

படுகளம் வாங்க

அன்புள்ள ஜெ

படுகளம் வாசித்தேன். விறுவிறுப்பான திரில்லர். திரில்லர்களில் வரும் கொலைகள், துப்பறிதல் போன்றவை ஒரு செயற்கைக் களத்தில் நிகழும். இவை நேர்வாழ்க்கைக்கு அணுக்கமான ஒரு சூழலில் நிகழ்கின்றன. மிக வேகமாக வாசித்துச்சென்றேன். அந்தக் கதைக்களத்தில் உண்மையாகவே வாழ்ந்த அனுபவத்தை அடைந்தேன். சுருக்கமாகச் சொன்னாலும் அந்தக் கடைவீதியையும், கடைகளின் அமைப்பையும் எல்லாம் நிஜமாகவே உணரமுடிந்தது.

பிரகாஷ்

*

அன்புள்ள ஜெயமோகன்.

நான் வாசிப்புக்கு வந்து ஓர் ஆண்டுதான் ஆகிறது. ஆட்டமாட்டிக் ஸ்பெல் செக் எல்லாம் போட்டுத்தான் எழுதுவேன். தமிழிலே கூட கஷ்டப்பட்டுத்தான் எழுதுவேன். நிறைய சினிமா, சீரியல்கள் பார்ப்பேன். கதை படிக்க ஆசை என்றாலும் ஓடாது. நான் முழுக்க வாசித்த முதல் நாவல் இதுதான்.

ஸ்ரீராம் அர்விந்த்

*

அன்புள்ள ஜெமோ

நான் புனைவு வாசிப்பை நிறுத்தி 12 ஆண்டுகளாகிறது. வாசிப்பு அதுவாகவே நின்றுவிட்டது. ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வேன். எதையாவது வாங்குவேன். ஆனால் வாசிப்பதில்லை. பெரும்பாலான புத்தகங்கள் 10 பக்கம் தாண்டுவதில்லை. ஏனென்றால் என்னுடைய வாசிப்பு குவிவதில்லை. அதை உடைக்க நிறைய முறை முயன்றேன். இந்த நாவலை தினமும் 12 மணிக்குக் காத்திருந்து வாசித்தேன். அற்புதமான அனுபவம், என் பழைய நாட்கள் திரும்பியதுபோல உணர்ந்தேன். உடனே இன்னொரு நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னால் வாசிக்கமுடியும் என உணர்ந்தேன். வாசிப்பு எவ்வளவுபெரிய கனவு என உணர்ந்தநாட்கள் இவை.

ஜி.சந்தானகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகடம்பூர் முதல் காரஹான் டெப்பே வரை ; கந்து , ரேதஸ், மின், லிங்க வழிபாடு
அடுத்த கட்டுரைஜே.எம்.சாலி