ஒரு தலைமுறை, சுசித்ரா கட்டுரை- கடிதம்

அன்புள்ள ஜெமோ,

நலம் தானே? இன்று எழுத்தாளர் சுசித்ராவின் இந்த கட்டுரையை (https://neeli.co.in/3283/) நீலி இதழில் படித்தேன். அபாரமான கட்டுரை. நான் சென்னையில் இருந்த போது சங்கீதம் கற்றுக்கொண்டேன். அப்போது இந்த பேசுபொருள் பற்றி கொஞ்சம் அறிமுகம் உண்டு. ஆனால் அதிகம் தெரியாது. அவ்வளவாக யாரும் சொல்லமாட்டார்கள்

இவர் கட்டுரையை படிக்கும் போது தான் மொத்த வரலாறும் தெரிய வருகிறது. அந்த காலத்தின் அரசியல் மாற்றங்களுடன் இணைந்து வாசிக்க வேண்டிய வரலாறு என்று தோன்றுகிறது. குறிப்பாக திராவிட கட்சிகளின் ஊடாட்டம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை (TJS ஜார்ஜ்) படித்தபோது ஒரு அதிர்ச்சி வந்தது. இது வேறு விதமான உணர்வை ஏற்படுத்தியது. ஆழமான துக்கம். கட்டுரை என்றாலும் புனைவு போல கொண்டு போயிருக்கிறார். ஒரு நாவல் படித்து முடிக்கும் போது வரும் உணர்வு. உங்கள் மொழிபெயர்ப்பாளர் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

நீலி இதழில் பல கட்டுரைகள் நன்றாக உள்ளன. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நேர்காணலும் அருமைஇந்த ஆண்டும் அமெரிக்க பயணம் உண்டா? உங்களை சந்திக்க ஆவல்.

மிக்க அன்புடன்,

வெங்கி

அன்புள்ள வெங்கி

இந்த ஆண்டும் செப்டெம்பர் அக்டோபரில் அமெரிக்கா வருகிறேன். சந்திப்போம். சுசித்ராவின் கட்டுரை  அண்மைக்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று என்பது என் எண்ணம்

ஜெ

முந்தைய கட்டுரைWhat kind of meditation classes?
அடுத்த கட்டுரையுவன் சந்திப்பு – கடிதம்