அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்

ஜெ,

இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அருண்

அருண்,

எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது? இந்திய பாரளுமன்ற ஜனநாயக அமைப்பே ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றை ஒன்று கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது

இன்று விசித்திரமான ஒரு நிலை. ஊழலில் சிக்கியுள்ள ஆளும்கட்சி ஊழலில் சிக்கிய முக்கிய எதிர்க்கட்சியை சகாவாகப் பார்க்கிறது. இருதரப்பும் ரகசியமாக ஒத்துப்போய் தேசத்தை அழிக்கும் மாபெரும் ஊழல்களை மௌனமாகப் புதைக்க நினைக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு இருக்கும் ஒரே வழி பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் ஒரு நேரடி மக்கள் பங்கேற்பு மட்டுமே. லோக்பால் அதையே கோருகிறது.

இதழாளர்களுடன் நான் பேசியதை வைத்துப்பார்த்தால், கடுமையான நிலைப்பாடு எடுத்தது பாரதிய ஜனதாதான். அதுதான் அண்ணா ஹசாரேவுக்கு முதல் எதிரியாக நிலைகொள்கிறது. காங்கிரஸ் பல விஷயங்களில் விட்டுக்கொடுக்க முன்வந்தாலும் பாரதிய ஜனதா தயாராக இல்லை. கர்நாடக லோக் ஆயுக்தாவிடம் பட்ட சூடு காரணம்.

கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இப்போது சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை பிற மாநிலங்களில் உருவாக்குவதை அண்ண ஹசாரே கோருவதை பாரதிய ஜனதா மூர்க்கமாக எதிர்க்கிறது.

நடைமுறையில் அது அண்ணா ஹசரே முன்வைக்கும் வரைவை நிராகரிக்கிறது. இப்போது அரசு முன்வைப்பதைவிட பலமில்லாத லோக்பால் மசோதாவை காலப்போக்கில் உருவாக்க வேண்டும் என பேசுகிறது. அதாவது விவாதம் தேவை என்பது தான் அவர்களின் நிலைப்பாடு

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா பேசியதை இந்திய அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய அயோக்கியத்தனம் என்றுதான் பாரதிய ஜனதா ஆதரவாளரான இதழியல் நண்பர் சொன்னார். அதாவது லோக்பால் சட்டத்தை அப்படியே தவிர்ப்பதுதான் அதன் இலக்கு.ஆனால் பலகுரல்களில் பலவகை மழுப்பல்களும் திசைதிருப்பல்களுமாகப் பேசி இன்றைய கூட்டத்தை அது தோற்கடித்தது.

உதிரி எதிர்க்கட்சிகளும் இடதுசாரிகளும்தான் உண்மையில் பெருமளவு அண்ணாவுக்குச் சாதகமான நிலைபாட்டை எடுத்துள்ளன. ஆச்சரியம்தான். அரசு முன்வைத்த மொக்கை லோக்பால் பில்லை திரும்பப்பெற்று வலுவான அதிகாரம் கொண்ட புதியலோக்பால் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என அவை இணைந்து கோரியுள்ளன. இடதுசாரிகளுடன் இதில் அ.தி.மு.கவும் இணைந்துள்ளது.

லோக்பால் ஏன் வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே ஆதாரம். ஊழல்களை மறைப்பதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்துக்கொண்டால் மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகி வந்தே ஆகவேண்டும்.

ஜெ

அண்ணா ஹசாரே இணையதளம்

அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைலோக்பால் போதுமா?