கண்ணெதிரே ஓர் ஆசிரியர் இருக்கவேண்டும், மாணவர்கள் அவருடன் தங்கவேண்டும், அவர்களுக்கு அந்த ஆசிரியருடன் ஆழமான ஓர் அகத்தொடர்பு உருவாகவேண்டும், அதுவே சிலவகை கல்விகளுக்கு உகந்தது என்பது என் எண்ணம். உண்மையில் அது நடராஜகுருவின் முதன்மைக் கருத்து. அவர் சார்போன் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு குருகுலக் கல்விமுறை பற்றியது.
முழுமையறிவு குருகுலக்கல்வியின் அவசியமென்ன?