யுவன் சந்திரசேகர் சந்திப்பு – வான்கூவர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வான்கூவரில் , மகேந்திராவும், ஆனந்தும் ஒருங்கமைத்த யுவன் சந்திரசேகர் அவர்களுடனான சந்திப்பிற்கு அமெரிக்காவிலிருந்து  நண்பர்கள் விஜய்யும் (கலிபோர்னியா), சீனிவாசன் (சியாட்டல்) சென்று வந்தார்கள். யுவன் உரையாக ஆற்றுவதைவிட, வாசகர்களுடன் உரையாடினால் நன்றாக இருக்கும் என்று விரும்பியதால்நிகழ்வு அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் நிகழ்வின் காணோளியை என்னிடம் பகிர்ந்தார். வெளிநாடு வரும் எழுத்தாளர்களிடம் கேட்கப்படும் சில வழக்கமான கவலை நிறைந்த பெற்றோர்களின் கேள்விகள் இருந்தாலும் யுவனுக்கென்று உள்ள கூறுமுறையில், புதுவாசகர்களுக்கு தெளிவை கொடுக்கும் பதில்கள் உள்ளன. Chatgpt-கிட்ட ஜோக் கேட்டா சொல்லும், ஆனா அது சிரிச்சிக்கிட்டே ஜோக் சொல்லுமா என எதிர் கேள்வி கேட்கும் யுவனுடனான இந்த உரையாடலை பல்லாயிரம் வாசகர்களுக்குப் போய்ச்சேரட்டுமென, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கத் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைஅழைப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைகே.தாமோதரன்