காடு சினிமாவாக?

 

காடு வாங்க

காடு மின்னூல் வாங்க

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

கார்த்திக் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து எழுதுகிறேன்.

காடு என் கைகளில் கிடைத்த 8 மாதங்களாக படிக்காமலே இருந்தேன். கடந்த ஒரு வாரம் முன்பு படிக்க ஆரம்பித்து படித்து முடித்தவுடன் இந்த மடலை எழுதுகிறேன்.

வாசித்த கொஞ்ச நேரத்திலேயே என்னை காடு தன்னுள் இழுத்து கொண்டது. காரணம் குறிஞ்சி நிலத்தில் வளர்ந்தவன், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவன் இந்த வட்டார வழக்கு சிறிதேனும் அறிந்தவன் என்பதாலேயோ.

நீங்கள் காட்டினை வர்ணித்த விதம் மிக அருமை. ஒவ்வொரு இடத்திலும் கிரியின் பார்வையில் காட்டின் அழகு என் மனக்கண்ணில் வந்து போகிறது

நீலியின்ஞாக்கு போகணும்‘ எனும் மென்மையான குரல் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.. நீலியின் பிம்பம் வந்த போதெல்லாம் மலையன் பழங்குடி பற்றி விக்கிபீடியா வில் தேடி சலித்து விட்டேன்அப்படி ஒரு பழங்குடி அங்கு வசித்தார்களா?? Wikipedia கேரளா மாவட்ட இடுக்கி பகுதிகளில் வாழ்ந்ததாய் தரவு தெரிவிக்கிறது

நீலியை கிரி பெரிதாய் நெருங்காததன் காரணம் மெது மெதுவாய் விவரித்தது அழகு

கபிலரை ஆங்காங்கு குறிஞ்சி நிலத்தை விவரிக்க வைத்தது சிறந்த ஒன்றுகாரணம் குறிஞ்சி நிலத்தை கபிலரை போல் யார் ரசித்து எழுதி இருப்பார்கள்.

மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை எப்படி எல்லாம் சிறிது சிறிதாக அழிக்கிறான், காமம்  ஒவ்வொரு கதை மாந்தர்களிடையே என்னவெல்லாம் செய்கிறது என்பது திரும்ப திரும்ப கண் முன் வந்து போகிறதுஇந்த காட்டில் அப்பழுக்கற்ற ஜீவன்கள் குட்டப்பனும் நீலியும் மட்டுமேகதையின் நாயகன் குட்டப்பன் மட்டுமே. காட்டினை அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கும் அவனால் அந்த காட்டிற்கு எந்த பாதகமும் இல்லை. ஒவ்வொரு பொழுதிலும் காட்டினை வர்ணிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், தொழுகிறான், மிரட்சியோடு அணுகுகிறான், என்றும் அதன் மேல் மரியாதை வைத்திருக்கிறான்.

மொத்தத்தில் இதன் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நன்றி….

ஓர் ஆசை: இதை ஒரு திரைக்கதையாக மாற்றி இதே போல் nonlinear  உத்தியில் கதை சொன்னால் திரைப்படமாக மிகவும் நன்றாக இருக்கும். காரணம் காதலும் காமமும் பிண்ணி  பிணைந்த ஓர் கதை.

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்

நன்றி.

காடு ஒரு சொல்லனுபவம் என எனக்குத்தெரியும். சொல்லிலும் புறவுலகம் முழுமையாக எழும் என்று காட்டும் படைப்பு

ஆனால் அதை தமிழில் சினிமாவாக ஆக்க முடியாது. அதில்கதாநாயகன்இல்லை. 

ஜெ 

முந்தைய கட்டுரைWith a Smile…
அடுத்த கட்டுரைஜே.வி.செல்லையா