இன்று கொஞ்சம் வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள். ஆகவே ஆன்மிக நூல்கள் பெரும்பாலும் விற்கின்றன. அவர்களுக்கு இலக்கியம் சார்ந்து ஒரு விலக்கம் உள்ளது. இலக்கியம் வெறும் பொழுதுபோக்கு என்று நினைப்பவர்கள் உண்டு. நேரடியாக கருத்துக்களை வாசிக்கமுடியாதவர்கள் புனைவை வாசிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். இலக்கியம் ஓர் அடிப்படையான கல்வி, அது இல்லாமல் எதுவுமே கற்கமுடியாது என்பதே உண்மை.
முழுமையறிவு ஆன்மிகக் கல்வியில் இலக்கியத்தின் இடமென்ன?